எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜூலை 15 சீனாவிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்து விட்டார். இந்திய வரலாற்றில் எந்தவொரு பிரதமரும் அன்னிய சக்திகளின் அதிகாரத்துக்கு இதுபோன்று அடிபணிந்து சென்றதில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை அல்லாத பயணமாக கடந்த ஏப்ரல் மாதம் சீனா சென்றார். அந்நாட்டின் வூஹான் நகரில் அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே, நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தகவல் தொடர்புகளை பலப்படுத்துவது என்று இரு தலைவர்களும் கூட்டாக முடிவு செய்தனர். இந்தச் சூழலில், சீனாவை எதிர்கொள் வதற்காக இந்திய ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து மலையேற்றப் படைப்பிரிவுகளையும் நிதிச் சிக்கல் காரணமாக கலைத்துவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தியை சுட்டிக் காட்டி, பிரதமர் நரேந்திர மோடியை சுட்டுரையில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவரது பதிவில், “நமது பிரதமரின் இலக்கு இல்லா சீன பயணத்தில், சீனாவுக்கு மறைமுக இலக்கு இருந்தது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்திய வரலாற்றில், வெளிநாட்டு சக்திகளின் அதிகாரத்துக்கு எந்தவொரு பிரதமரும் இதுபோன்று அடிபணிந்து சென்றதில்லை. பாஜகவின் தேசபக்தி வெட்ட வெளிச்சமாகியுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காமராஜர் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி,

மாணவர்களுக்கு பரிசளிப்பு!

குடியாத்தம், ஜூலை 15 குடியாத்தம் புவனேஸ்வரிப்பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 13-07-2018 அன்று கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதில்  டி.வனரோசா (மூத்த முதல்வர்)வரவேற்புரையாற்றினார். இவ்விழாவை முன்னிட்டு கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி முதலிய பல போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று பல பரிசுகளையும் பெற்றனர். பள்ளியின் செயலாளர் எஸ்.ரம்யா கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் மாணவர்களுக்கு தைரியம் வேண்டும் அதை வளர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த இடமாக இருப்பதுபள்ளித்தான் என அறிவுறுத்தினார். பள்ளியின் தாளாளர்வி.சடகோபன், கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை கூறி நல்லதொரு தலைமை யுரையை ஆற்றினார்.

இவ்விழாவிற்கு சிறப்பழைப்பாளராக குடியாத்தம் இன்னர் வில் சங்கம் பொறுப்பாளர் வசந்தி லட்சுமிபதி  சிறப்புரையாற்றினர்.சிறப்புரையாக மழை நீர் சேமிப்பு பற்றியும் தமிழகத்தின் அன்றைய நிலையும் இன்றைய நிலையும் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இறுதியாக நிகழ்ச்சியை பாவேந்தர் தமிழ் மன்றம் தலைவர் தமிழாசிரியர் எம்.சாதனந்தன், பாவேந்தர் தமிழ் மன்றம் செயலாளர் செண்பகவள்ளி தமிழாசிரியர் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு

ஓட்டுநர் உரிமம், ஓய்வூதியம் ரத்து!

அரியானா அரசு முடிவு

சண்டிகர், ஜூலை 15 பெண்களின் பாதுகாப்புநலன் கருதி தொடங்கப்பட்டு ள்ள இந்த திட்டம் வரும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) அல்லது ரக்ஷா பந்தன் (ஆகஸ்ட் 26) அன்றிருந்து அமலுக்கு வரும் என்றும் கட்டார் கூறியுள்ளார்.

மேலும், காவல்நிலைய த்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் பெண்கேலி வழக்குகள்தடையின்றி விசாரிக்கப்படும் என்று கூறியுள்ள கட்டார், விசாரணை அதி காரிகள், பாலியல் குற்றங்கள் மீதான விசாரணையை 1 மாதத்திற் குள்ளும், பெண்கேலி வழக்கு விசாரணையை 15 நாட்களுக்குள்ளும் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்கு களை விரைந்து முடிக்க, 6 விரைவு நீதிமன்றங்களை அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பா லும் பாஜக-வைச் சேர்ந்தவர்களாகவே இருந்து வரு கின்றனர். இந்நிலையில், பாஜக-வைச் சேர்ந்த முதல்வரே, ஓய்வூதியம், ஓட்டுநர் உரிமம் ரத்து என்று மிரட்டியிருப் பது பாஜக-வினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

நூலகத்தில் உறுப்பினராக பெரியார் பள்ளி மாணவர்கள் பெயர் பதிவு

பல்துறை அறிவு களைப் பெறுவ தற்கும், வாசிப்புத் திறனை மேம்படுத்து வதற்கும் 12.7.2018 அன்று பெரியார் பள்ளி மாணவ -  மாணவிகள் ஜெயங் கொண்டத்தில் உள்ள பொது நூலகத்திற்குச் சென்றனர்.

மேலும் தங்களை நூலக உறுப்பினராக பெயரைப் பதிவு செய்து நூலகத்தில் இருந்த பல்வேறு துறை சார்ந்த நூல்களைக் கண்டு படித்து மகிழ்ந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner