எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சிறீநகர், ஜூலை 15 மக்கள் ஜன நாயகக் கட்சியை (பிடிபி) பிளவு படுத்தத் திட்டமிட்டால் அதன் எதிர்விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மெஹ பூபா முஃப்தி பாஜகவுக்கு மறை முகமாக எச்சரிக்கை விடுத்துள் ளார்.

காஷ்மீரில் பிடிபி எம்எல் ஏக்களை தங்களது வசம் இழுக் கும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மெஹபூபா இத்தகைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பிடிபி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அண்மையில் பாஜக திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து அங்கு மெஹபூபா தலைமையில் நடைபெற்று வந்த ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து மத்திய அரசின் பரிந்துரையின்பேரில் அந்த மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மெஹபூபா வுக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர். இதன் பின்ன ணியில் பாஜக இருப்பதாகவும், பிடிபி எம்எல்ஏக்களின் ஆதர வைப் பெற்று மாநிலத்தில் ஆட்சியமைக்க அக்கட்சி திட்ட மிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சிறீநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மெஹபூபா முஃப்தி, அதன் பின் னர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

கடந்த 1987-ஆம் ஆண்டு நடை பெற்ற மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அய்க்கிய முஸ்லிம் முன்னணியை (எம்.யு.எஃப்.) சிதைக்க முயற்சி நடந்தது. அப்போது உருவானவர்கள்தான் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப் பின் முக்கியத் தலைவர் சையது சலாஹுதீன், யாசின் மாலிக் உள்ளிட்டோர்.

தற்போது பிடிபி கட்சியையும் பிளவுபடுத்த சிலர் எண்ணு கிறார்கள். குடும்பத்துக்குள்ளும், கட்சிக்குள்ளும் கருத்து வேறு பாடுகள் இருப்பது இயல்பே. அவற்றுக்கு எளிதில் தீர்வு காண முடியும்.

அதேவேளையில் அதை வைத்து கட்சியை பிரிக்க நினைத் தால் எதிர்விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்றார் அவர்.