எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஜூலை 15 பிரபல நிறுவனத்தின் முகப் பவுடரைப் பயன்படுத்தியதால், தங்களுக்கு கருப்பை புற்று நோய் வந்துள்ள தாகக் கூறி, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்த 22 பெண்களுக்கு 470 கோடி டாலர் (சுமார் ரூ.32,200 கோடி) இழப்பீடு வழங்க, அமெரிக் காவின் மிஸரி மாகாணம், செயின்ட் லூயிஸ் நகரிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குழந்தை களுக்கான பவுடர் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை விற் பனை செய்து வருகிறது.

அமெரிக்காவில் இந்த நிறுவனம் விற்பனை செய்த முகப் பவுடர்களைப் பயன் படுத்தியதால், தங்களுக்கு கருப்பை புற்று நோய் வந்ததாக ஏராளமான பெண்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வழங்கு தொடர்ந்துள்ளனர்.

ஜான்ஸன் பவுடர்களில் ஆஸ்பெஸ்டாஸ்’ பொருள் கலக்கப்படுவதாகவும், இதனால் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளாகவும் கூறப்படு கிறது.

இந்த நிலையில், செயின் லூயிஸ் நகரில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்திருந்த 22 பெண்களுக்கு 470 கோடி டாலர் இழப்பீடு வழங்குமாறு ஜான் ஸன் அண்டு ஜான்ஸன் நிறு வனத்துக்கு அந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த நிறுவனத்துக்கு எதி ரான வழக்குகளில், இத்தகைய தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

எனினும், இதுகுறித்து நிறு வனத்தின் தரப்பில் அளிக் கப்பட்ட விளக்கத்தில் கூறப்பட் டுள்ளதாவது:

எங்களது தயாரிப்புகளில் ஆஸ்பெஸ்டாஸ்’ இல்லை என் பதிலும், அவற்றைப் பயன் படுத்துவதால் புற்று நோய் உண் டாகாது என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

நியாமற்ற நீதி விசாரணை காரணமாகவே இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

எங்கள் நிறுவனத்துக்கு எதிரான தீர்ப்பை பெறுவதற்காக, மிஸரி மாகாணத்தில் வசிக்காத வர்கள் கூட, அந்த மாகாணத் திலுள்ள செயின்ட் லூயிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளது இதை உறுதிப்படுத்து கிறது என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner