எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தெலுங்கு தேசம் கட்சி முடிவு

அய்தராபாத், ஜூலை 16 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர் மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு தகுதி கேட்டு, மத்திய அமைச்சரவையில் இருந்தும், பாஜக கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. தொடர் அமளியில் கடந்த நாடாளு மன்ற கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, ஜூலை 18ஆம் தேதி தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வர சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். தெலுங்குதேசம் கட்சி சார்பில் இதற்கான மனுத் தலைவர் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் வழங்கப்பட உள்ளது.  சந்திரபாபு நாயுடுவின் இந்த முடிவால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.