எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெய்ப்பூர், ஜூலை 16 -பள்ளியில் சமைத்த மதிய உணவை   தொட்டு விட்டதாக கூறி அதனை நாய்க்குக் கொட்டிய அராஜகம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் கிராமத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள அரசுப் பெண்கள் ஆரம்பப்பள்ளியில் மாணவர் களுக்கு வழங்குவதற்காக மதிய உணவாக ரொட்டி தயா ரிக்கப்பட்டுள்ளது. கமலா வைஷ்ணவ் என்ற பெண் உதவியாளர் இந்த உணவை சமைத்துள்ளார். இந்நிலையில், உணவை வாங்கும்போது ரொட்டி இருந்த பாத்திரத்தை தலித் மாணவி ஒருவர் தொட் டுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உதவியாளர் கமலா வைஷ் ணவ், தலித் மாணவியை மிக மோசமான முறையில் திட்டி அவமானப்படுத்தியதுடன், தலித் மாணவி தொட்ட உணவு தீட்டுப்பட்டு விட்டதாக கூறி, உணவு முழுவதையும் நாய்க்கு கொட்டியுள்ளார். பள்ளி உதவி யாளரின் இந்த தீண்டாமையால் தலித் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனி டையே, மதிய உணவை நாய்க்கு கொட்டப்பட்டதை வீடியோ எடுத்திருந்த ஒருவர், அதனை சமூகவலைத் தளங் களில் பதிவேற்றியதால், தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வெளியுலகுக்கு தெரியவந்துள் ளது. அதன் பிறகே கல்வித் துறை அதிகாரிகளும் இப்பிரச் சினையில் தலையிட்டுள்ளனர். தீண்டாமையைக் கடைப்பிடித்த உதவியாளரை தற்போது இடை நீக்கம் செய்துள்ளனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner