எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

 

புதுடில்லி, ஜூலை 16 மகாராஷ்டிரத்தில் மூன்று மாதங்களில் மட்டும் கடன் சுமையால் 639 விவசாயிகள் தற்கொலை செய்து கொண் டனர் என்று அந்த மாநில வருவாய்த் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். அவர்களில் 174 பேரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட்டிருப் பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வறட்சி மற்றும் பயிர்க் கடன் சுமை காரணமாக விவ சாயிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வது தொடர் கதையாக உள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந் தாலும், மகாராஷ்டிரத்தில் அந்த எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாநில சட்ட மேலவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப் பினர். கடந்த மார்ச் மாதம் முதல் மே வரை மாநிலத்தில் எத்தனை விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டனர்? அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு என்ன? என்பன குறித்த தகவல் களை அவர்கள் கேட்டிருந்தனர். அவற்றுக்கு வருவாய்த் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் பதிலளித்துப் பேசியதாவது:

மூன்று மாதங்களில் 639 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களின் குடும் பத்தினருக்கு இழப்பீடு வழங் கப்பட்டு வருகிறது. தற் கொலை செய்து கொண்டவர் களில் 188 பேர் மாநில அரசின் பயிர்க் காப்பீடு மற்றும் இதர பலன்களைப் பெறத் தகுதியான வர்களாவர். அவர்களில் 174 பேரின் குடும்பத்தினருக்கு அதற்குரிய நிவாரணம் வழங் கப்பட்டுள்ளது. அதே வேளை யில், 122 பேரின் மரணம், இழப்பீடு அளிப்பதற்கான வரம்புக்குள் வரவில்லை. அத னால், அவர்களது குடும்பத்தின ருக்கு பெரிய அளவில் உத விகள் அளிக்க இயலவில்லை. இதர 329 பேரின் தற்கொலைச் சம்பவங்கள் குறித்து விசா ரணை நடைபெற்று வருகிறது என்று அந்த பதிலுரையில் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, இது தொடர்பாக செய்தியாளர்களி டம் கருத்து தெரிவித்த மகா ராஷ்டிர சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்செய் முண்டே, விவசாயிகளின் நலனைக் காக்க மாநில பாஜக அரசு தவறிவிட்டது என்றும் கடந்த ஆண்டு மட்டும் 1,500 விவசாயிகள் கடன் சுமையால் உயிரை மாய்த்தனர் என்றும் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner