எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராய்ப்பூர், ஜூலை 16 -சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக, பாஜக தலைமை மாந்திரீக பூஜை நடத் தியிருப்பது தெரிய வந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 நவம்பர் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஏற்கெனவே பாஜக-தான் ஆட்சியில் உள் ளது. ராமன் சிங் என்பவர் முதல்வராக இருக்கிறார். இந் நிலையில் வரப்போகும் தேர் தலிலும் வெற்றிபெற்று ஆட் சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாந்திரீக பூஜை நடத்தியுள்ளனர்.

சட்டப் பேரவை அலுவல கத்திலேயே நடத்தப்பட்ட இந்த பூஜையில், முதல்வர் ராமன் சிங் மற்றும் பாஜக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இது தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ராமன் சிங் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் இந்தியா என்று பிரதமர் மோடி ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, பாஜக-வினரோ இன்னும் மந்திரவாதியை விட்டு வருவ தாக இல்லை என்று விமர் சனங்களும் எழுந்துள்ளன.ஆனால், மாந்திரீக பூஜை யெல்லாம் நடக்கவில்லை என்றும், சட்டப்பேரவைக்கு வந்த மந்திரவாதி ராம்லால் காஷ்யப், பாஜக-வின் இளை ஞரணி மண்டலத் தலைவராக இருப்பவர் என்றும் பாஜக-வினர் மழுப்பியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner