எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுச்சேரி, ஜூலை 17 புதுவை சட்டப் பேரவையில் பூஜ்ய நேரத்தில்  சட்டப் பேரவை அ.திமு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப் பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:

அன்பழகன்: மத்திய அரசு நிர்வாகம் மற்றும் நிதி அதி காரம் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்து விட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்க முடிவு செய்து அதற்கான வரைவு திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. நிதி அதிகாரம் இல்லாத உயர்கல்வி ஆணையத்தை அமைத்துவிட்டு ஏற்கெனவே பல்கலைக்கழக மானிய குழுவிற்கு இருந்த நிதி அதிகாரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு வழங்க உள்ளதாக தெரிகிறது. இதனால் புதுச்சேரி அரசுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

மாநில கூட்டாட்சிக்கு எதிராக தற்போது மத்திய அரசால் பல்கலைக்கழக மானி யக்குழுவுக்கு பதிலாக உயர் கல்வி ஆணையத்தை கொண்டு வர உள்ளதை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி உறுதியாக எதிர்த்து மத்திய அரசுக்கு தனது கண்ட னத்தை தெரிவித்துள்ளார். நம் மாநில அரசின் முடிவினை இங்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் கமலக்கண்ணன்: இந்திய நாட்டில் 850 பல்கலைக் கழகங்களும், 60 ஆயிரம் கல் லூரிகளும் உள்ளன. இவற்றை கண்காணித்து பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவி அளித்து வருகிறது. ஆனால் அதை கலைத்துவிட்டு உயர் கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு கருத்துகளை கேட்டுள்ளது. தற்போதைய உத்தேச மசோதாவின்படி பல் கலைக்கழகங்கள் விஷயத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிட முடியும். எனவே இந்த மசோதாவை எதிர்க்கிறோம். அரசு சார்பில் எதிர்ப்பினை தெரிவிக்க உள்ளோம்.

முதல்வர் நாராயணசாமி: மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு படிப்படியாக எடுக்கிறது. தற்போது மசோதா மீது கருத்து தெரிவிக்க வரும் இருபதாம் தேதி வரை காலக் கெடு உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு மீதான விவ காரங்களில் மத்திய அரசு நேர டியாக தலையிட முடியாது. அதனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அதிகாரத்தை கையில் எடுக்க சட்டம் கொண்டுவர உள்ளது. புதுவை அரசு சார்பில் வருகிற 20ஆம் தேதிக்குள் எதிர்ப்பினை தெரிவிப்போம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner