எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காஸ்கஞ்ச், ஜூலை 18- உத்தரப்பிரதேசத் தில் ஜாதி ஆதிக்க சக்திகளின் எதிர்ப் பையும் மீறி, தாழ்த்தப்பட்ட மணமகன் ஒருவர் சாரட் வண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம் சென்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியின் மூலம், 80 ஆண்டு களுக்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்கள், மாப்பிள்ளை ஊர்வலம் செல்வதற்கான தங்களின் உரிமையை மீட்டெடுத்து உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் ஜாதவ். இவர், அருகிலுள்ள காஸ்கஞ்ச் மாவட்டம், நிஜாம்பூரிலுள்ள ஷீத்தல் குமாரி என்ற பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். கடந்த மார்ச் மாதமே, இவர்களது திருமணம் நடப்ப தாக இருந்தது.

அப்போது, மாப்பிள்ளை ஊர்வலத் தில் சஞ்சய் கலந்துகொள்வதற்காக குதிரை வண்டி ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. ஆனால், சஞ்சய் ஜாதவ்-, ஷீத் தல் இருவரும் தாழ்த்தப்பட்ட சமூகத் தவர் என்பதால், நிஜாம்பூரில் உள்ள தாக்கூர் பிரிவைச் சேர்ந்த ஜாதி ஆதிக் கக்கும்பலைச் சேர்ந்தவர்கள், மாப் பிள்ளை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் நடத்தக் கூடாது என்று ஊர்ப்பஞ்சாயத்து என்ற பெயரில் மிரட்டலும் விடுத்தனர்.

ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவரான மணமகன் சஞ்சய் ஜாதவ், மாவட்ட நிர்வாகத்தை நாடினார். எதிர்பார்த்ததைப் போலவே அவரின் புகார் கண்டுகொள்ளப்படவில்லை.

பின்னர் மாவட்ட நீதிபதிமற்றும் முதலமைச்சர் அலுவலகத்தை சஞ்சய் ஜாதவ் தொடர்பு கொண்டார். அலகா பாத் உயர் நீதிமன்றத்திலும் இதுகுறித்து முறையீடு செய்தார். இதனால், பிரச் சினை பெரிதாவதை அறிந்த தாக்கூர் பிரிவினர், திடீரென சஞ்சய் அவரது விரும்பும் பாதையிலேயே மாப்பிள்ளை ஊர்வலத்தை நடத்திக் கொள்ளலாம் என்று இறங்கி வந்தனர். சஞ்சய் - ஷீத்தலின் 5 மாதப் போராட்டத்திற்கு வெற்றியும் கிடைத்தது.

இதையடுத்து தாக்கூர் பிரிவினர் வசிக்கும் தெரு வழியாக, சஞ்சய் தனது மனைவி ஷீத்தலுடன் குதிரை வண்டி யில் ஊர்வலம் சென்றார். இதுதொடர் பான செய்தி மாவட்டம் முழுவதும் பரவிய நிலையில், இந்த ஊர்வலத்தை உள்ளூர் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்தன. நிஜாம்பூரில் 10 ஆய்வாளர்கள், 22 உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 300 காவல்துறையினரின் பாதுகாப்புடன்தான் ஊர்வலம் நடை பெற்றது என்றாலும், தங்களின் போராட் டம் முக்கியமான ஒரு வெற்றியைப் பெற்றிருப்பதாக மணமகன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner