எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 18 பக்கோடா தயாரித்துப் போராட்டம் நடத் திய, ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவருக்கு, அந்தப் பல்கலைக் கழகம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்திருப்பது தெரியவந்துள் ளது. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று, ஆட் சிக்கு வருவதற்கு முன்பு பிரத மர் மோடி வாக்குறுதி அளித் திருந்தார். ஆனால், பிரதமராகி 4 ஆண்டுகள் முடிந்த பின்னும் சில ஆயிரம்பேருக்குக் கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்த வில்லை.

இதுபற்றி மோடியிடம் கேட்டபோது, சாலையோரத் தில் ஒருவர் பக்கோடா கடை போட்டு, நாளொன்றுக்கு சில நூறு ரூபாய்சம்பாதித்தால் அது வும் கூட வேலைவாய்ப்புதான் என்று படித்த இளைஞர்களை கேலி செய்தார்.இது மாண வர்களை ஆவேசத்திற்கு உள் ளாக்கியது. மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பல் கலைக்கழக மாணவர்களும், இளைஞர்களும் ஆங்காங்கே பக்கோடாதயாரித்து போராட் டங்களில் ஈடுபட்டனர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் மாணவர்கள் பக் கோடா தயாரித்துப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மணீஷ்குமார் என்ற மாணவரை விடுதியிலி ருந்து வெளியேற்றிய ஜேஎன்யு பல்கலைக்கழக நிர்வாகம், பிரதமரை அவமதித்ததற்காக ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்தது. ஆனால், மணீஷ் குமார் இப்போதுவரை அபரா தத்தை செலுத்தவில்லை. இந் நிலையில், மணீஷ்குமார் ஜூலை 21-ஆம் தேதி தனது படிப்பை முடித்து ஆய்வு முடிவை சமர்ப்பிக்க உள்ள நிலையில், அபராதப் பணம் ரூ. 20 ஆயிரத்தை கட்டினால் மட்டுமே ஆய்வு முடிவை சமர்ப்பிக்க விடுவோம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் மிரட்டியுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் மணீஷ் குமார், நீதிமன்றத்தை நாடப்போவதாக தெரிவித்து உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner