எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஜூலை 18-- இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மனித உரிமை ஆணையமான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் கூறியுள்ளது.

நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையின மக்கள் போன்றவர்கள் மீது பரவலாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது; அதில், சில தாக்குதல்கள் அவர்களை கடுமையாக அவமதிக் கும் வகையிலும், கீழ்த்தரமாக நடத் தும் வகையிலும் இருக்கிறது; இந்த வகை தாக்குதல்கள், இந்தியா முழு வதும் அதிகரித்து வருகிறது என்று ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் குறிப் பிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் தாத் ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி, முகமது அக்லக் என்பவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இதுபோன்ற வெறுக் கத்தக்க தாக்குதல்கள் எந்த அளவுக்கு நடைபெறுகிறது என்பது பற்றி ஆம் னெஸ்டி இண்டர்நேஷனல் கணக் கெடுத்தது. அதில், 2015ஆம் ஆண்டு செப்டம்பருக்கு பிறகு இதுவரை 603 வெறுக்கத்தக்க குற்றங்கள் நடந்து உள்ளன.

2018-ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் நூறு குற்றங்கள் நடந்துள்ளன. அதில், உத்தரப் பிரதே சத்தில்தான் அதிக குற்றங்கள் நடந் துள்ளன. அங்கு மட்டும் 18 குற்றங் கள் நடந்துள்ளன. குஜராத்தில் 13 குற்றங்களும், ராஜஸ்தானில் 8 குற் றங்களும், தமிழ்நாடு, பீகாரில் தலா 7 குற்றங்களும் அரங்கேறியுள்ளன. கடந்த 6 மாதத்தில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிராக 67 குற்றச் சம்பவங் களும், முஸ்லிம்களுக்கு எதிராக 22 குற்றச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலத் தின் மேற்குப் பகுதிதான் இத்தகைய குற்றங்களுக்கான மய்ய பகுதியாக இருக்கின்றன.

குறிப்பாக மீரட், முசாபர் நகர், சகரான் பூர், புலந்த் சாகர்ஆகிய பகு திகளில் நிலைமை மோசமாக இருக் கிறது என்று ஆம்னெஸ்டி கூறியுள் ளது. மேலும், தாழ்த்தப்பட்ட மற் றும் சிறுபான்மை மக்கள் மீது நடத் தப்பட்ட தாக்குதல்களை, ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் தனது இணைய தளத்தில் சம்பவம் வாரியாகவும் பட் டியலிட்டுள்ளது.