எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 19 பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் காந்தியாரின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, மூத்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு திட்டம் ஒன்றை கொண்டு வந்து அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஆண் கைதிகளுக்கு 60 வயதும், பெண் கைதிகளுக்கு 55 வயதும் முடிந்து இருக்க வேண்டும். மொத்த தண்டனை காலத்தில் பாதியளவை அனுப வித்து முடித்து இருக்க வேண் டும்.

வரதட்சணை சாவு, பாலியல் வன்முறை ஆட் கடத்தல், பொடா, தடா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம், அன்னிய செலா வணி மேலாண்மை சட்டம் (பெமா), சட்டவிரோத நடவ டிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டங் களின் கீழ் தண்டிக்கப்பட்ட வர்கள், இந்த பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

போதைப்பொருள் தடுப் புச் சட்டம், லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களுக் கும் இந்த பொது மன்னிப்பு திட்டம் பொருந்தாது. அவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பு இல்லை.

70 சதவீத உடல் ஊனத் துடன் உள்ள மாற்றுத்திறனா ளிகள் பாதி தண்டனைக் காலத்தை கழித்து இருந்தால் விடுதலை செய்யப்படுவார்கள். மீள முடியாத நோய் தாக்கி யவர்கள், மூன்றில் ஒரு பங்கு தண்டனையை கழித்திருந்தால் அவர்களும் விடுவிக்கப்படு வார்கள்.

மரண தண்டனை விதிக் கப்பட்டவர்களும், மரண தண்டனை விதிக்கப்பட்டு பின் னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களும் விடு விக்கப்பட மாட்டார்கள்.

3 கட்டங்களாக இந்த பொது மன்னிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு மூத்த கைதிகள் விடுவிக்கப்படு வார்கள். முதல் கட்டமாக வரும் அக்டோபர் 2-ஆம் தேதியும், 2ஆ-வது கட்டமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதியும் (சம்பரண் சத்தியாகிரக இயக்க நினைவு நாள்), 3-வது கட்டமாக அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்க ளுக்கும் மத்திய அரசு அறிவுரை கடிதம் அனுப்பி வைக்கும். அவை ஒரு கமிட்டி அமைத்து தகுதியான நபர்களை தேர்வு செய்து, ஆளுநருக்கு அனுப்பி அரசியல் சாசனம் பிரிவு 161-இன் கீழ் அவரது ஒப்புதல் பெற்று, கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முடிவு எடுக் கப்பட்டு உள்ளது.