எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 19 ஆப்பிரிக்க மக்களின் மறைந்த மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா வின் நூறாவது பிறந்த நாள் விழாவைக் கொண் டாடும் விதத்தில் மாநிலங் களவையில் புதனன்று அவ ருக்குப் புகழாரம் சூட்டப்பட்டது.

நெல்சன் மண்டேலா குறித்து மாநிலங்களவைத் தலைவர் கூறியதாவது:2018 ஜூலை 18 நெல்சன் மண்டேலா 100ஆவது பிறந்த நாளைக் குறிக்கிறது. ஓர் அகிம்சைவாதியும் மற்றும் இன ஒதுக்கலுக்கு எதிரான புரட்சியாளருமான நெல்சன் மண்டேலா, தன்னுடைய நீண்டகால போராட்டத்தில்  காந்தியாரால் உத்வேகம் பெற்றவராவார். பிரிட்டிஷாரின் கீழ் இருந்த தென் ஆப்பிரிக்க அரசாங்கம் மற்றும் அதன் நிறவெறிக் கொள்கைகளுக்கு எதிராக அமைதி வழியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு, அகிம்சை முறையில் எதிர்ப்பினைத் தெரிவித்தார்.

நெல்சன் மண்டேலா உலகம் முழுதும் மனித உரிமை களுக்காகச் செயல்படும் ஆர்வலர்களுக்கு என்றென்றும் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார்.