எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தெலுங்கு நடிகரும் திரை விமர்சகருமான கத்தி மகேஷ் மீது ராமனை விமர்சித்ததாகவும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்திய தாகவும் இந்துத்துவ அமைப்புகளால் தெலங் கானா மாநிலம் முழுவதும் காவல்நிலையங் களில் புகார் தரப்பட்டுள்ளது.

ராமன் முட்டாள்

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட நடிகர் கத்தி மகேஷ் கூறியதாவது:

“என்னைப் பொறுத்தவரையில் ராமா யணம் ஒரு கற்பனைக் கதை. ராமன் சிறப்பான கதாபாத்திரமாக இருக்கலாம். என்னளவில் ராமன் ஒரு முட்டாள் என்றே நினைக்கிறேன். சீதா ராவண னுடனே தங்கியிருந்தால் அது சரியான முடிவாக இருந்திருக்கும்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், இந்து வாகினி, பிராமண இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவ அமைப்புகள் ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் அவர்மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளன.

பன்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் அவர்மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 295, 505 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

பேச்சுரிமை

“எதைப்பற்றியும் பேசுவற்கு பேச்சுரிமை இருக்கிறது. விவாதத்தின் ஒரு தரப்பாக எனது கருத்தைச் சொன்னேன்” எனச் சொல்லும் கத்தி மகேஷூக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்புகளும், அவரது நண்பர்களுக்கும் ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner