எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 22 -அண்மையில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், இந்தியப் பொருளாதாரம், பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி,6-ஆவது இடத்துக்கு முன்னேறி இருப்பதாக கூறப் பட்டிருந்தது. உடனே இது மோடியின் சாதனை என்று வழக்கம் போல பாஜக-வினர் பெருமை பேசத் துவங்கினர். இந்நிலையில், பாஜக பெருமைப்பட ஒன்றுமில்லை; சொல்லப்போனால் வெட்கப் பட வேண்டும் என்று காங் கிரஸ் கட்சியினர் பாஜக-வுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

2011-ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் மூன்றாவது இடத்தில் இருந்தநிலையில், தற்போது 6-ஆவது இடத்திற்கு வந்திருப்பது, எப்படி சாதனை யாகும்? என்று அவர்கள் கேட் டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான பிரிஜேஸ் கலப்பா தனது ட்விட்டர் பதிவில், பக்தாள் அனைவரும் இந்தியப் பொரு ளாதாரம் பிரான்சைப் பின் னுக்குத் தள்ளி 6-ஆவது இடத் துக் குமுன்னேறியுள்ளதைக் கொண்டாடிக் கொண்டிருக்கின் றனர்; இது மோடி விளைவு! 2011-ஆம் ஆண்டில் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது; அது மன்மோகன் விளைவு! என்று குறிப்பிட்டு கிண்ட லடித்துள்ளார். காங்கிரஸ் கட் சியின் மற்றொரு நிர்வாகியும், முன்னாள் சமூக வலைதளப் பிரிவுத் தலைவருமான கவுரவ் பந்தியும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்தியா 6-ஆவது இடத் துக்கு இப்போது வந்துள்ளதற்கு மோடிதான் காரணம் என்பதை நான் முழுமனதாக ஏற்கிறேன்; ஏனென்றால் 2013-ஆம் ஆண்டில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருந்தது என்று அதில் அவர் கூறியுள்ளார்.உண்மையில், 2011-ஆம் ஆண்டில் உலக வங்கி வெளியிட்டிருந்த பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கை, அப்போதைய சந்தை மதிப்பில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவை களை வைத்துக் கணக்கிடப் பட்டது. தற்போது உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையானது, நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த வகையில் பார்த்தாலும் கூட மோடி ஆட்சியில் இந்திய பொருளா தாரம் பின்னடைவையே சந் தித்துள்ளது என்பதே உண்மை யாகி இருக்கிறது