எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஜூலை 22 -பிரதமர் நரேந்திரமோடி உட னான சந்திப்பு எந்த பயனையும் அளிப்பதாக இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னி தலாவும் கூறியுள்ளனர்.

கேரள முதல்வர் தலைமையில், அம்மாநிலத்தின் அனைத்துக் கட்சி குழுவி னரைச் சந்திக்க பிரதமர் மோடி தொடர்ந்து மறுத்துவந்தார். 3 முறை நேரம் ஒதுக்கித்தர கோரியும் மோடி நேரம்ஒதுக்கவில்லை. இதுதொடர்பாக கேரளமுதல்வர் பினராயிவிஜயன் பகிரங்க குற்றச்சாட்டை வைத்த பிறகு, வேண்டாவெறுப்பாக வியாழக்கிழமையன்று நேரம் ஒதுக்கினார்.அதைத்தொடர்ந்து, முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் குழுவினர், பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.

அப்போது கேரளாவின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் எடுத்து ரைத்து, மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் சந்திப்பை முடித்து விட்டு வெளியே வந்த அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்றும், அனைத்து விசயங்களையும் அலட்சியமாகவே கேட்டுக் கொண்ட தாகவும் குற்றம்சாட்டினர். சந்திப்பு பலனளிக்கக்கூடிய வகையில் இல்லை; ரேசனில் ஒதுக்கப்படும் அரிசி உள்ளிட்ட தானியங்களின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தோம்; ஆனால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று பிரதமர் தெரிவித்துவிட்டார்; கோட்டயம் அருகிலுள்ள எச்என்எல் தொழிற்சாலையை மத்திய அரசே நடத்த வேண்டும் அல்லது மாநில அரசிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றோம்; கோழிக்கோட்டில் விமானம் தரையிறங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத் தோம்; ஆனால், ஒட்டு மொத்தமாகப் பிரதமரிடமிருந்து எங்களுக்குச் சாதகமான எந்தப் பதிலும் வரவில்லை; பாலக்காடு ரயில் பெட்டித் தொழிற்சாலை குறித்தும் அவரிடம் திட்டம் எதுவும் இல்லை என்று பினராயி விஜயன் தெரிவித்தார். அதே போல, கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசுகையில், இந்த சந்திப்பானது எங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது; எங்களின் கோரிக்கைகளுக்கு எதிர்பார்க்கும்படியான எந்த பதிலையும் பிரதமர் தரவில்லை என்று குறிப்பிட்டார்.