எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 22 சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக திரட்டப்பட்ட ரூ.77,000 கோடி நிதியை முறையாகப் பயன் படுத்தாமல் இருப்பது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள் ளது. மேலும், இந்த நிதியை சரிவரக் கையாண்டு திட்டங் களைச் செயல்படுத்தியிருந்தால் பல்வேறு சூழலியல் மாற்றங் களை எதிர்கொள்ளாமல் இருந் திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

நாட்டின் சுற்றுச்சூழல், வனச் சூழல் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல்வேறு நிதித் தொகுப்புகளை உருவாக்குமாறு உச்ச நீதிமன் றம் சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 12 நிதித் தொகுப்புகள் உருவாக் கப்பட்டு அதன் வாயிலாக ரூ.91,000 கோடி திரட்டப்பட் டது. அதில் ரூ.14,000 கோடியை மாநில அரசுகள் செலவிட்டிருப் பதாகத் தெரிகிறது. மீதமுள்ள தொகை பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழைம விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் காக திரட்டப்பட்ட நிதியானது மிகப் பெரிய தொகை. அத னைக் கொண்டு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன? எவ் வாறு அந்த நிதி செலவிடப் படுகிறது? அவை அனைத்தும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப் படுகின்றவா? என்பது குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதனை சரியாகப் பயன் படுத்தியிருந்தால் தில்லியில் காற்று மாசு ஏற்பட்டிருக்காது. அதேபோன்று யமுனை, கங்கை நதிக் கரைகளும் தற் போது இருக்கும் அளவுக்கு சீர்கேடாக இருந்திருக்காது என்று நீதிபதிகள் தெரிவித் தனர். அதைத்தொடந்து வாதிட்ட மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ்.நட்கர்னி, சம்பந் தப்பட்ட தொகையானது மாநில அரசுகள் வசமே உள் ளது; மாறாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் இல்லை' என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இது குறித்து உரிய விளக்கமளிக்க மாநில தலைமைச் செயலர்க ளுக்கும், மத்திய அரசுக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner