எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

ஜாகர்த்தா, ஜூலை 22- ஆசிய இளையோர் பாட்மிண்டன் வாகையர் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் தகுதி பெற்றுள்ளார். ஜாகர்த்தாவில் ஆசிய இளையோர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய வீரர்கள் பலர் தோல்வியுற்று வெளியேறிய நிலையில் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் அரையிறுதிச் சுற்றில் 4-ஆம் நிலை வீரர் இந்தோனேஷியாவின் இக்சான் லியோர்னர்டா ரம்பேவை 21--7, 21--14 என நேர் செட்களில் வென்றார். ஏற்கெனவே காலிறுதியில் இரண்டாம் நிலை வீரர் லி ஷிபெங்கை வீழ்த்தினார் லக்சயா என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் குணலவத் விடிசரனை எதிர்கொள்கிறார்.

உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி

லண்டன், ஜூலை 22- உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி துவக்க ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தை 1--1 என்ற கோல் கணக்கில் இந்தியா டிரா செய்தது.

வரும் வியாழக்கிழமை 26-ஆம் தேதி அடுத்த ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.