எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஜூலை 22- நாடாளு மன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது, எதிர்க் கட்சி உறுப்பினர் கள் எழுப்பிய ஒரு கேள்விக்கு கூட பிரதமர் நரேந்திரமோடி பதில் அளிக்கவில்லை; மாறாக அவரது பதிலுரை முழுவதும் மீண்டும் வெற்று வாய்ச்சவ டால் பேச்சுக்களாகவே அமைந் திருந்தது என்று சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி கூறியிருப் பதாவது:

நாடாளுமன்றத்தில் நம்பிக் கையில்லா தீர்மானங்கள் என் பவை, பொதுவாக அதிகாரத் தில் இருக்கும் அரசாங்கம் நேர் மையாக நடந்து கொள்ள மறுக் கும் போது, மக்களின் குரலை எதிரொலிக்க எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படுகின்றன. ஆனால் மோடி இதை உணர்ந்து கொள்ளாமல், மக்களவையி லும் நேர்மையாக நடந்து கொள்ள மறுத்திருக்கிறார். எதிர்க்கட்சி கள் எழுப்பிய - மக்கள் பிரச்சி னைகள் தொடர்பான ஒரு கேள்விக்குக் கூடஅவர் பதில ளிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை தேர்தல் கால மோசடி வாக்குறுதிகளையே - ஜூம்லாக் களையே அவர் அரங்கேற்றி யுள்ளார். கடந்த நான்காண்டு காலத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடு மையாக வீழ்ந்து கொண்டிருக் கும் இந்தியப் பொருளாதாரத் திற்கு மோடி தலைமையேற் றிருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல் லாத அளவிற்கு மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது என்ற உண்மையை மோடி ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மட் டுமல்ல, பொருளாதாரத்தின் ஒவ்வொரு முக்கிய அம்சமும் கடந்த நான்காண்டுகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாடு துயரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் போது, மோடி யும் அவரது ஆட்களும் இதை மதம் மற்றும் சாதி சம்பந்தப் பட்ட பிரச்சினையாக மாற்ற முனைகிறார்கள். அதேபோல, பாதுகாப்புத் துறையிலும் மிகப் பெரும் தோல்வி.

ரபேல்போர் விமானம் வாங்குவது தொடர் பான பேரத்தில் என்ன நடந்தது என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும்.மற்ற நாடுகளுக்கு சேவகம் செய்யும் இடமாக இந்திய நாடாளுமன்றத்தை மோடி அரசு மாற்ற முனைகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்திய நாடாளுமன்றத்தின் இறை யாண்மையை பறிக்க முயல் கிறாரா மோடி? ரபேல் பேரம் தொடர்பாக மத்திய தணிக்கை அதிகாரியால் தணிக்கை செய் யப்படாமல் இருப்பது ஏன்? இதுபோன்ற எந்த கேள்விக்கும் நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாத பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் மீது பாய்ந்து உள்ளார்.

ஆனால் உண்மை என்ன வென்றால், உங்களது ஆட்சி யின் மீது நம்பிக்கை இல்லை என்றுநாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததே உங்களது முன்னாள் கூட்டாளியான தெலுங்குதேசம் கட்சிதானே? இதுவே, மோடி ஆட்சி நம்ப கமற்றதுஎன்பதற்கு மிகப் பெரிய அடையாளம் அல் லவா? தெலுங்குதேசம் கட்சி, மத்தியில் அமைச்சர்களை கொண்டிருந்தது. சில மாதங் கள் முன்பு வரைஅவர்கள் அதி காரத்தில் இருந்தார்கள்.

ஆனால் அவர்கள்தான் இப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருக் கிறார்கள். இதையெல்லாம் கூட உணராமல், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் தனது மோசடியான வாய்ச் சவடாலை அரங்கேற்றியிருக்கிறார். கேட்டுக் கேட்டு புளித்துப் போன உதாவக்கரை புள்ளி விவரங்களை வாசித்தி ருக்கிறார். இந்தியப் பொருளா தாரமும், மக்களின் வாழ்நிலை யும் உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை உணராத பேச்சுஅது. இந்தப் பேச்சுக்கும், இந்த அரசுக்கும் முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. அந்த நேரம்இதுவே.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner