எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

திருவனந்தபுரம், ஜூலை 22- கேரள மாநிலத்தில் ஒன்றாம் வகுப்புமுதல் 10-ஆம் வகுப்பு வரை, தமிழில்தகவல் தொழில் நுட்பப் பாடநூல்களை வெளியிடவும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கான சிறப்பாசி ரியர்களை நியமிக்கவும், முதல் வர் பினராயி விஜயன் உத்தர விட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் முதல்பாட மொழி யாக மலையாளமே உள்ளது. ஆகவே, அனைத்துப்பள்ளிகளி லும் மலையாளம் கட்டாயம்.

அதேநேரம் பிற கற்பித்தல் மொழிகள் என்ற அடிப்படை யில், இந்தி, சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.அந்த வகையில், மலையாளம் தவிர்த்து, முதற்கட்டமாக ஆங் கிலம், தமிழ் ஆகிய மொழி களில் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரைதகவல் தொழில்நுட்ப பாடநூல் களை, கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும்பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை உதவியுடன் இந்த நூல் களைத்தயாரித்துள்ள கேரள கல்வித்துறை, தமிழ்ப் பாட நூல்களை மாணவர் களுக்குப் பயிற்றுவிக்க மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட, அதேநேரம் தமிழறிந்த தமி ழாசிரியர்களையும் நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளில், மாண வர்கள் தமிழ்வழியில் படிப்ப தற்கான பள்ளிகளை ஏற்கெ னவே கேரள அரசு நடத்தி வருகிறது. எஸ்டிபிஅய் - சிஎப் அய் கும்பலால் அண்மையில் படுகொலை செய்யப்பட்டவ ரும், தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவருமான அபிமன்யுயூவும் அதுபோன்ற ஒரு தமிழ்வழிப் பள்ளியில் படித்து முடித்துத்தான், கொச்சி மகராஜா கல்லூரியில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றிருந் தார் என்பதுடன், இந்திய மாண வர் சங்கத்தின் தலைவராகவும் உயர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner