எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, ஜூலை 22 மத்தி யில் உள்ள பாரதீய ஜனதா அர சுக்கு எதிராக, மக்களவையில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத் துக்கு ஆதரவாக 126 ஓட்டுக ளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம். பி.க்கள் தீர்மானத்துக்கு எதி ராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த நிலையில், கொல்கத் தாவில் நேற்று (21.7.2018) நடை பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட் டார்.

ஜெயலலிதா இருந்திருந் தால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத் தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய பாரதீய ஜனதா அர சுக்கு எதிராக (தீர்மானத்துக்கு ஆதரவாக) வாக்களித் திருப் பார்கள் என்று அப்போது அவர் கூறினார். அத்துடன் தமிழ் நாட்டில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியைத்தான் சந்திக்கும் என்றும் அவர் குறிப் பிட்டார்.

மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசுகை யில் கூறியதாவது:-

பாரதீய ஜனதா மக்களின் செல்வாக்கை இழந்து வருகி றது. மத்தியப் பிரதேசம், உத் தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பல மாநி லங்களில் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து உள்ளது. முன்பு பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் அதில் இருந்து விலகி விட்டது. நம்பிக்கை இல்லாத் தீர் மானம் கொண்டு வரப்பட்ட விவகாரத்தில் சிவசேனாவும், பாரதீய ஜனதாவை கை விட்டு விட்டது.

எனவே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள வைத் தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அடையும். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், மத்திய அர சுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்துள்ள போதிலும், அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு நூற்றுக்கும் குறை வான இடங்களே கிடைக்கும்.

ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டாட்சி முன்னணி என்ற புதிய அணியை தொடங்க உத்தேசிக் கப்பட்டு உள்ளது. கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் மாபெ ரும் பேரணிக்கு அந்த கட்சிக ளின் தலைவர்கள் அழைக்கப் படுவார்கள். மத்தியில் பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் நாங்கள் உறுதி யாகவே இருக்கிறோம். அதற் கான பணிகளை இந்த மாதமே தொடங்குவோம். இது அடுத்த மாதத்தில் இருந்து தீவிரம் அடையும். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.