எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்

புதுடில்லி, ஜூலை 28 2016இல் தமிழகத்தில் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுஅறிக்கை அளித்தது. ஆனால், அதற்கு மாறாக 381 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மத்தியவேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை அமைச்சர் பர்சோத்தம் ரூபலா தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு ஒரு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில், வறுமையில் வாடிய 82 விவசாயி களுக்கு நிவார ணம் அளிக்கப்பட்டது. அதில்,தற்கொலை செய்து கொண்ட30 விவசாயிகளும் அடக்கம் என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை அமைச்சர் பர்சோத் தம் ரூபலா, 2016இல் 381 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். விவசாயக் கடன், வறுமை, பயிர்களின் தோல்வி மற்றும் குடும்ப பொருளா தாரம் அனைத்தும் கடனில் மூழ்கி திவாலான நிலை ஆகியவற்றால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார். இத்தகவலுக்கு ஆதாரமாக குற்றங்களை ஆவணப்படுத்தும் தேசியஅமைப்பின் 2016இன் அறிக்கையை குறிப்பிட்டார்.

விவசாயிகள் தற்கொலைகள் பற்றிய தகவல்களில் உள்ள முரண்பாடுகள் குறித்து தமிழக வேளாண்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணுவிடம் கேட்ட போது, இந்த தகவல்கள் மாவட்ட ஆட்சியர்கள் திரட்டி தந்ததாக குறிப்பிட்டார்.