எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜூலை 29- உத்தர பிரதேச மாநிலத்தில், போலீஸ் அதிகாரி ஒருவர், அம்மாநில முதல்வர், யோகி ஆதித்யநாத் முன் மண்டியிட்டு வணங்கி, ஆசி பெற்றது, பெரும் சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநில காவல் துறையில், போலீஸ் அதிகாரியாக பணிபுரிபவர், பிரவீன் குமார் சிங்.சமீபத்தில், வட மாநிலங்களில், குரு பூர் ணிமா விழா கொண்டாடப் பட்டது.

இந்நிலையில், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள, கோரக் நாத் கோவிலின் மூத்த பூசாரி யாக இருக்கும், மாநில முதல் வர், யோகி ஆதித்யநாத்திடம், பிரவீன் குமார் சிங், மண்டி யிட்டு வணங்கி ஆசி பெற்றார்; முதல்வர் யோகி ஆதித்யநாத் துக்கு பொட்டும் வைத்தார்.இது தொடர்பான புகைப்படங் களை, சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில், பிரவீன் குமார் சிங் பதிவிட்டார்; 'ஆசிர்வதிக் கப்பட்டதாக உணர்கிறேன்' என, அந்த பதிவில் குறிப்பிட் டார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.'சீருடையில் இருக்கும் போலீஸ் அதிகாரி, முதல்வர் முன் மண்டியிட லாமா?' என, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய் தன. இதையடுத்து, பேஸ்புக் கில் இருந்து, சம்பந்தப்பட்ட புகைப்படங்களை, பிரவீன் குமார் சிங் நீக்கினார். மேலும், பேஸ்புக் கணக்கில் இருந்தும் வெளியேறினார்.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner