எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லக்னோ, ஜூலை 30-  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர் தலின்போது அளித்த வாக்குறு திகளில் ஒன்றைக் கூட பாஜக இதுவரை நிறைவேற்றவில்லை என்று சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விடியோ பதிவு ஒன்றையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த நிலையில், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன் னதாக இந்த காணொலி பதிவை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டு உள்ளது. சுமார் 40 விநாடிகள் ஓடக் கூடிய அந்தப் பதிவில் பாஜகவின் 10 வாக்குறுதிகள் பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பொருளாதார உதவி, 15 நிமிடங்களில் ஆம் புலன்ஸ் மற்றும் காவல்துறையினர் சேவை, இலவச மடிக் கணினி, இணையதள வசதி என பாஜகவின் பல்வேறு வாக் குறுதிகள் அதில் குறிப்பிடப் பட்டுள்ளன.

அவற்றில் எதுவுமே செயல் படுத்தப்படவில்லை என்று அந்த காணொலி பதிவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மோடி யின் உத்தரப் பிரதேச வருகை யும், அவரது நிகழ்ச்சியும் மக் களிடம் தவறான தகவல்களைத் தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையாகும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த ஒரு நடவடிக்கையையுமே பாஜக அரசு முன்னெடுக்க வில்லை. ஆனால், உத்தரப் பிரதேசம் மேம்பட்டுவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி அதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், பாஜக தலைவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. இது வெறும் காற்றில் கோட்டை கட்டுவதற்கு ஒப்பாகும். மக்க ளின் நலனுக்காக மாநில அரசு எந்தத் திட்டத்தையும் செயல் படுத்தவில்லை என்பதுதான் உண்மை என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner