எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில், ஜூலை 31- மீனவர்கள், மலைவாழ் பகுதி மக்களின் வசதிக்காக ரூபாய் ஒரு  லட்சம் மதிப்பில் சாட்டி லைட் போனை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.

செயற்கைகோள் வழியாக தொலைபேசி சேவையை (சேட் டிலைட் போன்) மக்களுக்கும் அனுமதியை பிஎஸ்என்எல்-க்கு மட்டும் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஒரு சாட்டிலைட் போன் விலை ரூபாய் 70 ஆயிரம். மேலும், ஜிஎஸ்டி 28  சதவீதமும்,  வயர்லெஸ் பிளா னிங் கோஆர்டினேசன் கட்டண மாக ரூபாய் 14,250 கட்டணமும் செலுத்த வேண்டும். அந்த வகையில் ஒரு சாட்டிலைட் போனை வாங்க 1 லட்சத்து 3 ஆயிரத்து 850 கட்டணம் செலுத்த வேண்டும்.

சாட்டிலைட் போன் சேவை பிஎஸ்என்எல் சார்பில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப் பட்டபோதிலும் அது பல்வேறு அரசு துறைகளின் அலுவலக அதிகாரிகள் வசதிக்காக மட் டுமே பயன்படுத்தப்பட்டு வந் தது. தற்போது முதல்  முறை யாக பொதுமக்கள், தனியார் நிறுவனங்களின் பயன்பாட் டிற்கு வழங்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. இதற்கு முதலில் கருவிக்கான விண் ணப்பத்தை பூர்த்தி செய்து கட் டணம் ரூபாய் 1180, ஜிஎஸ்டி 18 சதவீதத்துடன்  செலுத்த வேண்டும்.