எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.1 உத்தரகண்ட்-உத்தரப் பிரதேசம் இடையே பாய்ந்தோடும் கங்கை நீர் பயன் படுத்த ஏற்றதாக இல்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிருப்தியை வெளிப்படுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக அந்தத் தீர்ப் பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட் டுள்ளதாவது:

உத்தரகண்ட் மாநிலம், அரித் துவார், உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் ஆகிய நகரங்கள் இடையே பாய்ந்தோடும் கங்கை நதி குடிநீராகப் பயன்படுத்துவ தற்கும், நீராடுவதற்கும் ஏற்றதாக இல்லை. சிலர் இந்த நதியை புனிதமாகக் கருதி அருந்துவ துடன், நீராடவும் செய்கின்றனர். கங்கையில் நீராடினால் சொர்க்கத் துக்கு செல்வோம் என்று கருதி அவர்கள் நீராடுகின்றனர்.

அதன் காரணமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு “சொர்க்கத் துக்கு’’ சென்றுவிடக் கூடாது.

அதனால், அவர்களின் உடல் நலத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. புகைப் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது போல், தூய்மையற்ற இந்த நதியில் நீராடு வதால் ஏற்படும் பாதிப்பு களைக் குறிப்பிட்டு ஏன் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட கூடாது?

எனவே, கங்கை நதி பாய்ந் தோடும் பகுதிகளில் அந்த நதி நீராடுவதற்கும், குடிநீராக பயன் படுத்துவதற்கும் ஏற்றதா? இல் லையா? என்பதை குறிப்பிட்டு பலகை வைக்கப்பட வேண்டும். 100 கி.மீ. இடைவெளியில் பல கைகள் வைக்கப்பட வேண்டும்.

இந்தத் தகவல்களை தமது இணையதளத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2 வாரங் களுக்குள் குறிப்பிட வேண்டும்.

இதுதொடர்பான அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கங்கை நதியைத் தூய்மைப் படுத்த உத்தரகண்ட் அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிக்க வில்லை என்று கடந்த 16-ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கவலை தெரிவித்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner