எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஆக.2 இஸ்ரோ வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி, 2005ஆம் ஆண்டில் இஸ்ரோவின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக்கொண்டு பல் வேறு சாதனை களை படைத்து தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த் தவர் மயில்சாமி அண்ணாதுரை.

மயில்சாமி அண்ணாதுரை 31.7.2018 அன்று இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய இஸ்ரோவிலிருந்து பணி ஓய்வு பெற்றார்.

கோவை மாவட்டத்தில் உள்ள கோவாடி  எனும் கிராமத் தில் 22.07.1958-இல் பிறந்த மயில் சாமி அண்ணாதுரை, பள்ளிக் கல்வியை தமிழ்வழியிலேயே பயின்றவர் என்பது குறிப் பிடத்தக்கது. 1980இ-ல் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து 1982-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் (இந்திய விண் வெளி ஆய்வுக் கழகம்) அறி வியல் ஆய்வாளராகப் பணி யாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.  அவருடைய கடு மையான உழைப்பும் கண்டு பிடிப்புத் திறனும் அவரின் தனித்தன்மையை அடையாளம் காட்டின. ஆரம்பக் காலங்களில் அய்.ஆர்.எஸ்.1ஏ, இன்சாட்-2ஏ, இன்சாட்-2பி திட்டங் களில் மேலாளராகவும் 1994இல் இன்சாட்- 2சி செயற்கைக் கோள் திட்டத்தின் துணை இயக்குநரா கவும் பணியாற்றியுள்ளார்.

சந்திராயன், மங்கள்யான்

திட்ட இயக்குநர்

நிலவுக்கு அனுப்பிய சந்திராயன்-1 மற்றும் செவ்வாய்க் கோளிற்கு அனுப்பிய மங்கள் யான் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த செயற்கைக் கோள்களின் திட்ட இயக்குநராகப் பணி யாற்றியவர்.  சந்திராயன்- 2 திட் டத்திலும் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். சந்தி ராயன்-2 செயற்கைக் கோள் வரும் அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய அளவிலும், பன்னாட்டள விலும் 75-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். `வளரும் அறிவியல்’ என்ற அறிவியல் மாத இதழில் கவுரவ ஆசிரியராக உள்ளார். கட்டுரை யாளர், கவிஞர், சிறந்த பேச்சாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்டவர். அழகுத் தமிழில் அறிவியலை விளக்கி எழுது வதில் ஆர்வம் கொண்டவர்.

சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட் களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவதை வழக்க மாகக் கொண் டிருக்கிறார்.  கடந்த 36 ஆண்டுகளாகப் பெங் களூரு இஸ்ரோவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள மயில்சாமி அண்ணாதுரை பணி யிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.  பணி நிறைவு பாராட்டு விழாவில்  சக விஞ்ஞானிகளும், இஸ்ரோ ஊழியர்களும் வாழ்த்து கூறி பிரியாவிடை அளித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner