எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஆக. 2- ஜப்பான் நாட்டு நாண யமான யென்னின் மதிப்பு, தொடர்ந்து உயர்ந்து கொண்டே போவதால், புல்லட் ரயில்திட்டத்திற்காக இந்தியா பெற்ற கடன் தொகையில் திடீரென ரூ. 6 ஆயி ரத்து 160 கோடியை அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திட் டப்பணிகளே இன்னும் துவங் கப்படாத சூழலில் கடன் மதிப்பு- அதுவும் ஒரே ஆண்டில் ரூ. 6 ஆயிரம் கோடி அதிகரித் துள்ளது ரயில்வே துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

ஜப்பான் நாட்டு கடனுத வியுடன் மும்பை, அகமதாபாத் இடையே 508 கி.மீ.தூரத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி செலவில் புல்லட் ரயில் திட்டம் செயல் படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்தி யாவின் முதலாவது அதிவேக புல்லட் ரயில் திட்டம் என்றும் இத்திட்டத்தை அவர் அழைத் தார். மேலும், குஜராத் தேர் தலையொட்டி, ஜப்பான் பிர தமர் ஷின்சோ அபே-வை இந்தி யாவுக்கே நேரில் வரவழைத்து கடந்த ஆண்டு அகமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டத்தை மோடி துவக்கி வைத் தார். அப்போதே இத்திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது.

இந்தியா போன்ற நாட்டில் சாதாரண மக்களும் பயணிக் கும் வகையிலான ரயில்களை இயக்குவதுதான் சரியாக இருக்கும். புல்லட் ரயில் எல்லோருக்கும் பயன்படாது. இப்படியொரு திட்டத் திற்கு ரூ. 1 லட்சம் கோடியை முடக்க வேண்டியதில்லை. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-யைப் போல இதுவும் தோல்வி அடையும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அதை யெல்லாம் கண்டுகொள்ளாமல் தற்போது புல்லட் ரயில் திட் டத்திற்கான நிலமெடுக்கும் வேலைகள் நடந்து வருகின் றன. சுமார் 100-க்கும்மேற்பட்ட பழங்குடியின மக்கள் அவர் களின் வாழ்விடத்திலிருந்து விரட்டப்பட்டு வருகின்றனர். தங்களின் கிராமங்கள் முற்றி லுமாக அழியும் நிலையில் பழங்குடி மக்கள் வேத னையுடன் போராடி வருகின் றனர்.

மத்திய பாஜக அரசோ, 2018-க்குள் நிலமெடுக்கும் பணி களை முடித்து விட்டு, 2019 ஜனவரியில் புல்லட் ரயில் திட்டப் பணிகளை துவங்கி விடுவது என்று தீவிரமாக உள்ளது. இந்நிலையில்தான் புல்லட் ரயில்திட்டத்திற்கான கடன்மதிப்பு திடீரென அதி கரித்து, மோடி அரசுக்கு அதிர்ச் சியை ஏற்படுத்தி யுள்ளது. புல்லட் ரயில் திட்டத்திற்காக இந்தியா ரூ. 1 லட்சம் கோடியை செல விட உள்ளது. இதில் ரூ. 88 ஆயிரம் கோடியை ஜப்பான் அரசிடம் தான் 0.1 சதவிகித வட்டிக்கு இந்தியா கடன் வாங்கியுள்ளது.

இதனை 50 ஆண்டுகளுக்குள் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டும். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி, புல்லட் ரயில் கடன்திட் டத்திற்கான ஒப்பந்தம் கையெ ழுத்தானது.இந்தியா கடன் வாங்கியபோது, போரெக்ஸ் சந்தை நிலவரப்படி ஜப்பான் நாட்டு நாணயமான யென் மதிப்பு 57 பைசாவாக இருந் தது. இது கடந்த ஜூலை 25-ஆம் தேதி 61 பைசாவாகவும், ஜூலை 31 அன்று 62 பைசா வாகவும் உயர்ந்துள்ளது.

இதனால் இந்தியா ஜப்பானுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை, வாங்கிய கடன்தொகையைக் காட்டிலும் திடீரென ரூ. 6 ஆயிரத்து 200 கோடி அளவிற்கு உயர்ந் துள்ளது. இதில் வட்டி சேர்க் கப்படவில்லை. அதையும் சேர்த்தால் பல ஆயிரம் கோடி களை ஜப்பா னுக்கு அள்ளித்தர வேண்டும். யென் நாணய மதிப்பு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவின் கடன்மதிப்பும் வட்டியும் பலமடங்கு அதிக ரிக்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாகவே இந்திய ரூபாய்க்கு நிகரான ஜப்பான் நாட்டின் யென் மதிப்பு அதி கரித்து வருகிறது. ஜப்பானிடம் வாங்கிய கடனை 50 ஆண்டு களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும் எனும்போது அதற்குள்- வட்டி அல்லாமல் கடன் மதிப் பிலேயே எவ்வளவு தொகையை அதிகமாக செலுத்த வேண்டி யிருக்கும்? என்பதை நினைத்து ரயில்வே அதிர்ச்சியில் உறைந் துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner