எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஆக 3 -ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன் பாடு மற்றும் தொழிற் சாலைகளிலிருந்து வெளி யேற்றப்படும் கழிவுகள் ஆகியவற்றின் விளைவு களால் இந்தியாவில் 50 சதவிகித நிலத்தடி நீர் நஞ்சாக மாறிவிட்டது என்று மத்திய அரசேஅதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள் ளது.இந்தியாவிலுள்ள நிலத்தடி நீரில் புளூரைடு, இரும்பு, ரசாயனங்கள் போன்றவற்றின் அளவு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நீரில் கலந்துள்ள வேதிப்பொருட் களால், மனி தர்கள் மற்றும் விலங்குகளுக்குக் கடுமையான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கின்றது.

குடிநீரில் நைட்ரேட் கலந்திருந்தால், உடல் முழுவதும் முக்கிய ஆக்சிஜனைக் கொண்டிருக்கும் இரத்தத்தின் திறனில் குறைவுஏற்படும். நீண்ட காலத்திற்கு ஆர்சனிக் நிறைந்த நீரைக் குடிப்பதனால், தோல் புற்றுநோய், சிறுநீர்ப்பை, சிறுநீரக மற்றும் நுரையீரல்புற்றுநோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இனப்பெருக்கக் குறைபாடுகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.இந்நிலையில், நிலத்தடி நீர் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்களன்று அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்தியாவின் நிலத்தடி நீரில் புளூரைடு, இரும்பு, ரசாயனங்கள் போன்றவற்றின் அளவு கவலை தரும் அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், தலைநகர் டில்லியில் உள்ள 11 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அளவுக்கு அதிகமாக புளூரைடு, நைட்ரேட்கள் போன்ற ரசாயனங்கள் கலந்துள்ளன. நாடு முழுவதும் 386 மாவட் டங்களில் நைட்ரேட்,335 மாவட்டங்களில் புளூரைடு, 301 மாவட் டங்களில் இரும்பு, 212 மாவட்டங்களில் உப்பு, 153 மாவட்டங்களில் ரசாயனம், 30 மாவட்டங்களில் குரோமியம், 24 மாவட்டங்களில் காட்மியம்ஆகியவை நிலத்தடி நீரில் அளவிற்கு அதிகமாகவே உள்ளன; சில மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner