எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஆக. 4 -உத்தரப்பிரதேசத்தில் பெண் மருத்துவ அதிகாரி ஒருவருக்கே, அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் குடிக்க தண்ணீர் தர மறுத்த கொடுமை நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சீமா. கால்நடைத்துறை துணை தலைமை அதிகாரியாக இருக்கிறார். இவர், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கசாம்பி மாவட்டத் தில் உள்ள ஆம்பவா பூராக் கிராமத்துக்குச் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்துள்ளார். 2 கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இந்த ஆய்விற்கு வந்திருந்த நிலையில், இது வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை டாக்டர் சீமா ஆய்வு செய் துள்ளார்.

ஒருகட்டத்தில், உடல் சோர்வுற்ற நிலை யில் அங்கிருந்தவர்களிடம் குடிப்பதற்கு டாக்டர் சீமா தண்ணீர் கேட்டுள்ளார்.ஆனால், டாக்டர் சீமா தாழ்த்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவர் என்பதால், அங்கிருந்த ஒருவர்கூட தண்ணீர் தர முன்வரவில்லை. இதனால், சுமார் இரண்டரை மணிநேரம் தண்ணீரின்றி அவர் தவித்துள்ளார்.

டாக்டர் சீமா ஒரு சர்க்கரை நோயாளி என்பதால், ஒருகட்டத்தில் அவருக்கு உடலில் நடுக்கமும் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவழியாக ஆய்வை முடித்துக் கொண்டு, வேறு இடத்துக்குச் சென்று தண்ணீர் குடித்துள்ளார். இதனிடையே, டாக்டர் சீமா தனக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை குறித்து, மாவட்ட ஆட்சியர் மணீஷ்குமார் வர்மாவிடம் புகார் தெரிவித்தார். அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் குப்தாவை விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆம்பவா பூராக் கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்திய பிரதீப் குப்தா, டாக்டர் சீமாவுக்கு தண்ணீர் கொடுக்காமல் அவமதித்தது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து ஊராட்சி பெண் தலைவர் ஷிவ் சாம்பத், அவருடைய கணவர் பங்கஜ் யாதவ், சாய் பாசா ஊராட்சித் தலைவர் அன்சார் அலி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜலார் திவாரி, ஊராட்சி அலுவலர் ரவிதத் மிஸ்ரா மற்றும் ராஜேஷ்சிங் உள்ளிட்ட 6 பேர் மீது, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner