எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.4 கேட்டரிங், வணிக மேலாண்மை ஆகிய கல்வி நிறுவனங்கள் விதிகளை மீறியவையாக அதிக அளவில் உள்ளதாக மத்திய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் மக்களவை யில் நடைபெற்ற விவாதத்தின் போது, எப்போதுமில்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் 11 போலி பொறியியல் கல் லூரிகள் உள்ளதாக குறிப் பிடப்பட்டது. அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏஅய்.சி.டிஇ) அனுமதி அளிக்கப்படாத நிறுவனங் களில் கேட்டரிங் மற்றும் வணிக மேலாண்மை கல்லூரி களால் மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாவதாக குறிப் பிடப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது,  நாடு முழுவ தும் கடந்த மூன்று ஆண்டு களில் போலியாக இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகள் குறித்து அரசுக்கு தெரிய வந் துள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மத்திய மனித வளமேம்பாட் டுத்துறை அமைச்சர் சத்யபால் சிங் போலியான பொறியியல் கல்லூரிகள் குறித்த பட்டியல் அரசிடம் உள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர் சத்யபால் அளித்த பதிலில் கூறப்பட்டுள் ளதாவது: அனுமதி பெறாமல் இயங்கி வருகின்ற கல்வி நிறு வனங்கள், உரிய அனுமதியைப் பெற ஏஅய்சிடிஇக்கு விண் ணப்பித்திட வேண்டும் என்று ஏஅய்சிடிஇ தனிப்பட்ட வகை யில்  கடிதம் மூலமாகவும், பொது அறிவிப்பு மூலமாகவும்   வெளியிட்டது. மாநில அரசு களுக்கும் அந்நிறுவனங்கள் குறித்து தகவல் அனுப்பி வைக் கப்பட்டுள்ளது-. உரிய அனு மதியைப் பெற்றிட வேண்டும் அல்லது அனுமதி பெறாத நிறு வனங்களை மூடிட வேண்டும் என்று ஏஅய் சிடிஇ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.