எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.4 காவிரியில் கழிவு நீர் கலக்கும் விவகாரத் தில் விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்ய கர்நாடக அர சுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர் பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரு நாடகத்தின் தொழிற்சாலைக ளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், காவிரி, பெண்ணை யாறு ஆகியவற்றில் கலந்து தமிழகத்தின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளுக்கு வருகிறது. இக் கழிவு நீரில் மனிதர்கள், விலங் குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய நச்சுப் பொருள்கள் இருப் பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, உயிரினங்களுக் கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், காவிரியில் கலப்பதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு 2017, ஜூலை 7-இல் விசாரணைக்கு வந்த போது, காவிரியில் கழிவுநீர் கலப்பதை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து 6 மாதங்களில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. இந்நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தின் கூட்டுக் கண்காணிப்புக் குழு, உச்ச நீதிமன்றத்தில் இறுதி ஆய்வறிக்கையை கடந்த ஜூலை 14-ஆம் தேதி தாக்கல் செய்தது.

அதில், காவிரியின் துணை ஆறுகளான தென்பெண்ணை, அர்க்காவதியில் கழிவுகளின் அளவு வரம்பை விட மீறி இருப்பது கண்டறியப்பட்டுள் ளது. கர்நாடகத்தில் உள்ள நதிகளின் நீர், தர அளவுகோலை எட்டும் வகையில் தொழிற் சாலைக் கழிவுகளை ஒழுங்கு முறைப்படுத்தவும், கழிவு களை சுத்திகரிப்பதற்கான உள் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்கும் ஒரு விரிவான நடவடிக்கையை கர்நாடக மாநில அரசு மேற்கொள்ளும் தேவை உள்ளது' என தெரி விக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கு ரைஞர் ஜி. உமாபதி உச்ச நீதி மன்றத்தில் கடந்த ஜூலை 27-ஆம் பதில் மனு தாக்கல் செய் தார். அதில், காவிரிப் படுகை யில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீரை சுத்திகரிப்பது தொடர்பாக உள்கட்டமைப்பு வசதிகளை கருநாடகம் உரு வாக்குவது தொடர்பாக கண்கா ணிக்கவும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக் கண்காணிப்புக் குழு அளிக்கும் அறிக்கையை காலாண் டுக்கு ஒரு முறை ஆய்வு செய் யும் வகையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலை வர் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும். கருநாடக எல்லையிலிருந்து தமிழகத்துக்குள் வரும் காவிரி, தென்பெண்ணை நதிகளில் உள்ள கழிவுகளை நிகழ்நேரத்தில் கண்டறியும் நீர் தரக் கண்காணிப்பு மையங் களை உருவாக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கள் எஸ்.ஏ.பாப்தே, எல். நாகேஸ் வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்ததது. அப் போது கருநாடக அரசின் சார் பில் ஆஜரான வழக்குரைஞர் அதீம், இந்த வழக்கில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரி யத்தின் அறிக்கை தொடர்பாக பதில் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கைக்கு விளக்க அறிக்கை அளிப்பது தொடர் பாக வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கருநாடக அரசின் வழக்குரை ஞர் கேட்டு கொண்டுள்ளார். அதன்படி விளக்க அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கு ஒரு வாரத்துக்குப் பிறகு எடுத்துக் கொள்ளப்படும்' எனத் தெரிவித்தனர்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner