எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஆக. 4- மகாராஷ்டிரா மாநிலத்தில்  முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்ப தற்கு ஏஅய்எம்அய்எம் கட்சி உள்ளிட்ட முஸ்லிம் அமைப் புகள் வரவேற்றுள்ளன.

முஸ்லிம்களுக்குக் கல்வி யில் 5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும்கூட அதைத் தேவேந்திர பட்நாவிஸ் தலை மையிலான அரசு அதைச் செயல்படுத்தாமல் இருக்கி றது என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள மராட்டிய இனத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மராட்டிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின் றன. இந்தப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித் தார். அதில் அவர் கூறுகை யில்,  மராட்டிய மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.

அதேபோல, ஏற்கெனவே உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பான முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 சதவீதம் இட ஒதுக்கீட்டையும் தேவேந்திர பட்நாவிஸ் அரசு நடை முறைப்படுத்த வேண்டும்.

மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு மட்டுமின்றி, தங் கர்ஸ், முஸ்லிம்கள் உள்ளிட்ட மற்ற பிரிவினரையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் நியாய மான 5 சதவீத இடஒதுக்கீட் டுக்கு நாங்கள் ஆதரவு தெரி விக்கிறோம் எனத் தெரிவித் தார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற சிவசேனாவின் ஆதர வுக்கு ஏஅய்எம்அய்எம் கட்சி வரவேற்றுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner