எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.4  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி, எஸ்டி) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம் பெறச் செய்யும் திருத்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

முன்னதாக, எஸ்சி, எஸ்டி வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமை யான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்ய வழிவகுக்கும் மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வ தற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை (1.8.2018) ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், வியாழக்கிழமை அவை கூடியதும், அவையின் மய்யப் பகுதிக்கு வந்த காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் முக்கியப் பிரிவுகளை மீண்டும் இடம் பெறச் செய்யும் சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று ஒலி முழக்கமிட்டனர்.

அப்போது பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மிகவும் முக்கியமான விஷயம். இது தொடர்பான சட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் மக்கள்தொகையில் 25 சதவீதம் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் இப்போது கடுமையான இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் முக்கிய காரணமாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த உட னேயே வன்கொடுமை சட்டத்தை வலுப் படுத்தும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருக்க வேண்டும்‘ என்றார்.

முன்னதாக, தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டப்படும் நபர்களை முதல் கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடி யாக கைது செய்வதற்கு தடை விதித்தும், குற்றம்சாட்டப்பட்டோர் முன் பிணை பெறுவதற்குரிய அம்சங்களை அறிமுகப் படுத்தியும் உச்சநீதிமன்றம் கடந்த மார்ச்சில் தீர்ப்பளித்தது.

எஸ்சி, எஸ்டி சட்டத்தால் அப் பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த தீர்ப்பை வழங் கியதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

எனினும், இத்தீர்ப்பானது, எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கடுமையான பிரிவு களை நீர்த்துப்போக செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தில், தலித் அமைப் புகள் சார்பில் வரும் 9-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட் டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner