எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கவுகாத்தி, ஆக.4  அசாம் மாநில குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில், மேற்கு வங் காள முதல்வர் மம்தா பானர்ஜி  உள்நாட்டுப் போர் மூளும் என்று கூறினார்.

அதனால், அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மம்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேச ஒற்று மையை அச்சுறுத்தும் வகையி லும், அசாமில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக மம்தா பர்னாஜி மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுபற்றி கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, நான் இதற் கெல்லாம் பயப்பட மாட் டேன். மேற்கு வங்காளத்தில் அமர்ந்திருக்கும் என்னை அசாமில் பதிவு செய்த வழக்கு என்ன செய்யும்? லட்சக்கணக் கான வழக்குகள் பதிவு செய் தாலும், கவலைப்பட மாட் டேன் என்று கூறியுள்ளார். வங்கதேசக் குடியேறிகள் விவகாரத்தில் லட்சம் வழக்குகள் போட்டாலும் பொதுமக்களுக்கான நீதிக்கான எங்களுடைய போராட்டம் தொடரும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். டில்லிக்கு சென்ற போது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசினேன், பொதுமக்களுக்கு எந்தஒரு துன்புறுத்தலும் இருக்காது என உறுதியளித்தார். இப்போது என்னுடைய கேள்வி எங்களு டைய மக்களவை உறுப்பி னர்கள் அசாமில் தாக்கப்பட் டது ஏன்? என்பதுதான் என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.