எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.5 டில்லி பல்கலைக்கழக தேசிய மாணவர் சங்கம் சார்பில் ‘டியூத்’ ஆங்கில இதழ் வெளியீட்டு விழா மற்றும் ‘கருத்து சுதந்திரம் குறித்த விளக்கம்’ எனும் தலைப்பில்  கருத் தரங்க நிகழ்வை 31.7.2018 அன்று நடத்த  ஏற்பாடு செய்யப்பட்டது.

இதழ் வெளியீடு மற்றும் கருத்தரங் கம் நிகழ்வுகளை நடத்துவதற்கு  பல் கலைக்கழகம் அனுமதி அளித்திருந்த நிலையில், ஆர்.எஸ்-.எஸ்-. மாணவர் அமைப்பாகிய அகில வித்யார்த்தி பரிஷத், ஏபிவிபி எதிர்ப்பு தெரிவித்த காரணத்தைக் குறிப்பிட்டு, டில்லி பல் கலைக்கழக நிர்வாகம் அனுமதியை விலக்கிக்கொண்டது.

‘டியூத்' இதழ் வெளியீடு மற்றும் கருத்தரங்க நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் பல்கலைக்கழக வளாகத் துக்கு வெளியே நிகழ்ச்சியை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

அரங்க நிகழ்ச்சியாக ஏற்பாடு செய் யப்பட்டு, அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. நிகழ்வின்பங்கேற்பாளர்கள்,சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள் அனை வரும் சாலையில் நடத்தப்பட்ட  நிகழ் வில் கலந்துகொண்டனர்.

தேசிய மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் குணால்

டில்லி பல்க¬லைக்கழக வளாகத்தில் அரங்க நிகழ்ச்சி நடத்த அனுமதியை தேசிய மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் குணால் பெற்றிருந்தார்.

குணால் கூறும்போது,

“இதழ் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சிக்குரிய பதாகை அமைத்து அரங்கத்தை அலங்கரித்து வைத்திருந்தோம்.  முன்பதிவு செய்தி ருந்தோம். இந்நிலையில், வேறு எவரும் முன்பதிவு செய்திராத நிலையில், எங் களுக்கு அந்நிகழ்ச்சியை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ராக்கி துசீத் தேர்ந்தெ டுக்கப்பட்டதுகுறித்து கீழமை நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. டில்லி உயர்நீதிமன்றத்தில் மாணவர் சங்கத் தேர்தலில் அவர் போட் டியிட்டது செல்லாது என்று 20.7.2018 அன்று உத்தரவானது. அதனாலேயே, நிகழ்ச்சியை நடத்த அவர்  பெற்ற அனுமதி தானாக விலக்கிக்கொள்ளப்பட்டது என்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் மூத்த அலுவலர் தெரிவித்தார்.

ஆனால், மாணவர் சங்கத் துணைத் தலைவர் குணால் ஷெராவத் டில்லி பல்கலைக்கழக அரங்கில் நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதியை 23.7.2018 அன்று  பெற்றிருந்தார் என்று மாணவர் சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது----.

‘டியூத்’ இதழில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், டில்லி மேனாள் முதல்வர் ஷீலா தீக்ஷித், சுவராஜ் அபியான் தலைவர்யோகேந்திரா, பாஜகசுப்பிர மணியசாமி உள்ளிட்ட பலர், மாண வர்கள், எழுத்தாளர்கள் பல்வேறு கட்டு ரைகளை எழுதியுள்ளார்கள்.

ரபேல் விமான ஒப்பந்தம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஒரு பாலின உறவு, இந்துத்துவா, காஷ்மீரில் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் ‘டியூத்’ இதழில் இடம்பெற்றுள்ளன.

தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய பொறுப்பாளர் ருச்சிகுப்தா கூறுகையில், “டில்லி பல்கலைக்கழக 96 ஆண்டு கால வரலாறில் பல்கலைக்கழக கருத் தரங்க மய்யத்தில் முதல் முறையாக மாணவர்கள் நடத்தும் இதழாக ‘டியூத்’ இதழ் வெளியீட்டு விழாவை காங்கிரசு கட்சி மாணவர் அமைப்பாகிய இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைமையிலான டில்லி பல்கலைக்கழக மாணவர்சங்கம் ஏற்பாடு செய்தது. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் ஏபி விபி கொடுத்த அழுத்தத்தால், கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சிக்கான அனுமதியை விலக்கிக்கொண்டது’’ என்றார்.

பேராசிரியர் அபூர்வானந்த், காங்கிரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் கவுடா, தி வயர் இணைய இதழ் நிறுவனர் சித்தார்த் வரதராஜன், தேசிய மாணவர் சங்கத் தலைவர் ருச்சி குப்தா, அனைத்திந்திய மாணவர் சங்கம் பக்வால்பிரீத் கவுர் ஆகியோர் கருத்து சுதந்திரம் எனும் தலைப்பில் கருத்தரங்கில் விவாதம் நடத்திட இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஏபி விபி எதிர்ப்பால் பல்கலைக்கழக நிர் வாகம் அளித்த அனுமதியை விலக்கிக் கொண்டது.

இதுகுறித்து அபூர்வானந்த் கூறுகை யில்,

நிகழ்ச்சிக்கு அளிக்கப்பட்ட அனு மதியை விலக்கிக் கொண்டதன்மூலமாக, இந்தியாவில் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்தின்மீதான தாக்குதல்களிலிருந்து பல்கலைக்கழகங்களும் தப்பவில்லை என்பதை காட்டுகிறது என்றார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner