எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ,ஆக.5 உத்தரப் பிரதேச மாநிலத்தில் காந்தியார் சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டதற்கு காங்கிரசு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொதுப் பிரச்சினைகளை திசைதிருப்பிடவே இது போன்று ஆளும் பாஜக செய்து வருவதாக காங்கிரசு கட்சி குற்றம் சாற்றியுள்ளது.

சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்தபின்னர் அம்மாநிலத்தில் கட்டடங்கள், தலைவர்கள் சிலைகளை காவிமயமாக்கிவருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல் அரசு கட்டடங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு காவி நிற வண்ணம் பூசப்பட்டு வருகிறது. சட்டப்பேரவைக் கட்டடம், காவல் நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சாமியார் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு காவி நிறம் பூசப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், அம்பேத்கர் சிலைகளுக்கும் சில இடங்களில் காவி நிறம் பூசப்பட்டு, சர்ச்சை வெடித்தது. பின்னர், அம்பேத்கர் சிலைகளில் காவிநிறம் மாற்றப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷாஜகான்பூர் மாவட் டத்தின் பண்டாதேசில் பகுதியில் உள்ள தாக்கா கான்ஷியாம்பூர் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காந்தியார் சிலை அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. காந்தியார் சிலையை சீரமைப்பாதாகக் குறிப்பிட்டு, காந்தி சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டிருப்பதற்குக் காங்கிரசு கட்சி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

காந்திக்கு காவி நிறம் பூசப்பட்டதன் பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரசு கட்சி கூறியுள்ளது.