எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.5 அரசு பணியில் பதவி உயர்வு நடவடிக் கையில் எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கு 22.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதாடியது.

மேலும், பதவி உயர்வு விவகாரத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து கடந்த 2006-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத் தரவை மறு ஆய்வு செய்யுமாறும் கோரியுள்ளது.

கடந்த 2006-இல் நாகராஜ்-யூனி யன் ஆஃப் இந்தியா’ வழக்கு தொடர்பான உத்தரவின்போது, அரசு பணியில் பதவி உயர்வு நடவடிக்கையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டு வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டிய தேவை யையும், பதவி உயர்வுகளில் அவர்களுக்கான போதிய வாய்ப்பு இல்லாமையையும் அரசு நிரூபிக் கும் பட்சத்தில் அவர்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்படலாம் என்று கூறியிருந்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அவற்றின் மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நாரிமன், சஞ்ஜய் கிஷன் கவுல், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு வியாழக் கிழமை நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால் வாதாடியதாவது: கடந்த 2006-இல் நாகராஜ் வழக்கு உத்தரவின்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகள் செயல்படுத்த முடியாதவையாகும்.

அரசு பணியில் ஓர் ஆண்டில் 100 பதவி உயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதில் சுமார் 22.5 சதவீத பதவி உயர்வுகள் எஸ்சி, எஸ்டி பிரிவி னருக்கு அளிக்கப்பட வேண்டும். இல்லையேல், ஏற்றத்தாழ்வுக்கு எதிரான நடவடிக்கை கானல் நீராகவே தொடரும்.

கடந்த 1992-ஆம் ஆண்டு சாவ்னே வழக்கு’ விசாரணையின்போது, எஸ்சி, எஸ்டி பிரிவினர் சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவர்களாக இருக்கும் நிலையில், அவர்களது பின் தங்கிய நிலை குறித்து ஆய்வு செய்யத் தேவையில்லை’ என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.

எனவே, நாகராஜ்-யூனியன் ஆஃப் இந்தியா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டதைப் போன்று பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில், அவர்களது பின்தங்கிய நிலையை சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு, பின்னர் வழக்கு விசா ரணையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner