எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஆக. 7 தேசியவாத காங்கிரசு தலைவர் சரத்பவார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாட்டில் இந்திராகாந்தி அவசர நிலை கொண்டு வந்த போது என்ன நிலை நிலவி யதோ அதே நிலை இப்போது நிலவுகிறது.

அன்று இந்திராகாந்தி செய் தது போலவே பிரதமர் மோடி, ஊடகங்களையும், அரசு மற் றும் அரசு நிறுவனங்களை முழுமையாக தனது கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்.

அன்று இந்திராகாந்திக்கு என்ன எதிர்ப்பு இருந்ததோ அதே போன்ற எதிர்ப்பு இப் போது மோடிக்கு ஏற்பட்டுள் ளது. பிரதமர் மோடி தங்களை ஏமாற்றி விட்டதாக மக்கள் கருதுகிறார்கள். இதனால் மக்கள் அவருக்கு எதிராக ஒன்று திரண்டிருக்கிறார்கள்.

1977இ-ல் இந்திராகாந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சேர்ந்து வலுவான ஓர் அமைப்பை உருவாக்க முடியுமா? என்ற நிலை இருந்தது. மக்களும் அய்யத்துடனே பார்த்தனர். ஆனால், கட்சிகளும், தலைவர் களும் இதை ஒரு சவாலாக ஏற்று ஒரு வலுவான அமைப்பை அன்று உருவாக் கினார்கள்.

அப்போது தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னதை மற்ற கட்சிகளின் தலைவர்கள் கேட்டார்கள். பல கட்சித் தலைவர்களும் தங்கள் மன வேறுபாடுகளை மறந்து விட்டு ஒரே கட்சிக்கு வந்தனர்.

ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல் மோடிக்கு எதிராக சோனியா காந்தி, தேவேகவுடா மற்றும் நானும் சேர்ந்து ஒரு வலுவான அணியை உருவாக்குவோம். எங்கள் மூவருக்குமே பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை.

எதிர்க்கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக நிற்க வேண்டும் என்பது தான் எங்களது ஒரே திட்டம்.

அதே நேரத்தில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வரு வது என்பது சாத்தியம் இல்லை. ஏனென்றால் மேற்கு வங்காளம், கேரளா, டில்லி போன்ற மாநிலங்களில் அரசி யல் சூழ்நிலை வேறு மாதிரி யாக இருக்கிறது.

எனவே, ஒவ்வொரு மாநி லத்திலும் அங்குள்ள சூழ்நி லைக்கு தகுந்த மாதிரி எதிர்க் கட்சிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியில் கொண்டு வருவோம்.

இவ்வாறு சரத்பவார் கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner