எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஆக.11 தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடு பட்டு வருகிறது. இதனி டையே, மழை மற்றும் நிலச் சரிவால் கடந்த சில தினங் களில் பலியானவர்களின் எண் ணிக்கை 29-ஆக அதிகரித் துள்ளது.

பல்வேறு பகுதிகளில் வீடு கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பல பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதிலும் 439 முகாம்களில் 53,401 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரள மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந் துள்ளது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன. வயநாடு, இடுக்கி, எர்ணா குளம், கோழிக்கோடு, மலப் புரம், ஆலப்புழை உள்ளிட் டவை பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களாகும்.

குறிப்பாக, மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரண மாக வயநாடு மாவட்டம், பிற பகுதிகளில் இருந்து துண்டிக் கப்பட்டுள்ளது. மிகுந்த பாதிப் புக்குள்ளான 7 மாவட்டங் களிலும் ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உடனடி பாலங்களை அமைத்து மக்களை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். இதேபோன்று, விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோரும் மீட்புப் பணி களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளத்தில் உள்ள 40 ஆறுகளிலும் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. இதை யடுத்து, 22 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.