எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.11 பிரான்சு நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.  இது குறித்த தகவல் களை வெளியிடவேண்டும் என்று காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து வற் புறுத்தி வந்தார். ஆனால், இது ரகசியம் காக்கப்படவேண்டிய ஒப்பந்தம் என்பதால் இதுபற்றி தெரிவிக்க முடியாது என்று ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார்.

இப்பிரச்சினையை  நாடா ளுமன்றத்தில் அரசுக்கு எதி ரான நம்பிக்கையில்லா தீர் மானத்தின் மீதான விவாதத் தின்போது எழுப்பிய ராகுல் காந்தி, டில்லியில் நான் பிரான்சு அதிபர் மேக்ரனை சந்தித்தபோது, அவர் ரஃபேல் ஒப்பந்தம் ரகசியமான ஒன்று அல்ல என்று என்னிடம் சொன்னார். எனவே, நிர்மலா சீத்தாராமன் பொய் சொல்கிறார் என்று குற்றம் சாட்டினார். இதனையடுத்து, ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவ காரம் தொடர்பாக ராகுல்காந்தி கூறுவது முற்றிலும் தவறானது என்று ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்நிலையில் ராகுல் காந்தி யின் குற்றச்சாட்டை மறுப்பு தெரிவித்து பிரான்ஸ் அறிக் கையை வெளியிட்டுள்ளது. 2008இ-ல் நடந்த பாதுகாப்பு உடன்படிக்கையின்படி ரகசி யங்களை பாதுகாக்க ஒப்புக் கொள்ளப்பட்டது, அதன்படி ரகசிய தகவல்களை வெளியிட முடியாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

விவசாயக் கடன் தள்ளுபடி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசை குற்றம்சாட்டி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று சோனியாகாந்தி தலை மையில் எதிர்க்கட்சி  எம் பிக்கள்  போராட்டம் நடத் தினர். முத்தலாக் சட்டத்தில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு மிகவும்  தெளிவாக உள்ளது, இதை மேலும் நான் கூற மாட்டேன் என  சோனியா காந்தி கூறினார்.