எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.12  ரயில் பயணி களுக்கு பயணத்தின்போது வழங்கப்படும் இலவசக் காப் பீடு, வரும் ஒன்றாம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதி காரி ஒருவர் தெரிவித்தார்.

செப்டம்பர் ஒன்றாம் தேதிக் குப் பிறகு, காப்பீடு வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு பயணிகளுக்கே வழங்கப்படும் என்றும், அந்தக் காப்பீடு பெறு வதற்கான கட்டணத் தொகை இன்னும் சில நாள்களில் வெளி யிடப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

 

ரயில்வே இணையதளம் அல்லது அதன் செல்லிடப்பேசி செயலி மூலமாக பயணச்சீட்டு பதிவு செய்யும் பயணிகளுக்கு இலவசக் காப்பீட்டுத் திட்டம் தற்போது நடைமுறையில் உள் ளது.

இதன்படி, பயணத்தின் போது ஒரு நபர் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், உட லைக் கொண்டு செல்வதற்கு ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கப்படும். உடல் ஊனம் ஏற்படும் அளவுக்கு காயம் ஏற்பட்டால் ரூ.7.5 லட்சமும், காயமடைபவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.

பயணிகளிடையே டிஜிட் டல் பரிவர்த்தனைகளை ஊக்கு விக்கும் வகையில், இந்த இலவசக் காப்பீட்டுத் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் முதல் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி அதை கட்டண முறையில் வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பற்று அட்டை மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்வோ ருக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கும் திட்டத்தை ரயில்வே துறை இதற்கு முன்பு செயல்ப டுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner