எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.12 பிரதமர் நரேந்திர மோடி யின் சிந்தனை தாழ்த்தப்பட்டோ ருக்கு விரோதமாகவே உள்ளது என்று காங் கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர் சித்துள்ளார்.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை (தடை) சட்டம் தொடர்பாக உச்சநீதிமன் றம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப் பின்மூலம், எஸ்.சி., எஸ்.டி. சட்டம் நீர்த்து போக செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி, நாடு முழுவதும் தலித் அமைப்புகள் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம்மிகப்பெரியபோராட்டம்நடத் தப்பட்டது.இதையடுத்து,நாடுமுழு வதும்தலித்அமைப்புகள்சார்பில் வியாழக்கிழமைவேலைநிறுத்தத்திற்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந் தது. இதையொட்டி, டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தலித் அமைப்புகள் சார் பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் ராகுல் காந்தி பேசிய தாவது:

பாஜக ஆட்சியில் ஒவ்வொரு சம்பவமும் உள்நோக்கத்துடனேயே நடக்கின்றன. தலித் துகளுக்கு பிரதமர் மோடியின் மனதில் இடமில்லை. அப்படி அவரின் மனதில் இடமிருந்தால், தலித்துகள் தொடர்பான மத்திய அரசின் கொள்கைகள் வேறு மாதிரி உருவாக்கப்பட்டிருக்கும்.குஜராத்தில் தனது உரைகள் குறித்த புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அந்த புத்த கத்தில், தலித்துகள் ஆன்மிக ரீதியில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார். இந்த வரிகளில் இருந்து தலித்துகளைபற்றி பிரதமர் மோடி என்ன நினைக்கிறார், தலித்துகள் தொடர்பான அவர் என்ன கொள்கையை கடைப்பிடிக்கிறார் என் பதை புரிந்து கொள்ளலாம்.

கல்வியிலும்,நாட்டின்வளர்ச்சியிலும் தலித்துகளுக்குஇடம்கொடுக்கப்படுவதை பிரதமர்மோடியும்,பாஜகவும்,ஆர்எஸ் எஸ்சும் விரும்பவில்லை. பிர தமர் நரேந்திரமோடியின்சிந்தனைதலித் விரோதமாகஇருக்கிறது.அவர்களை ஒடுக்கவேமோடிநினைக்கிறார்.இதைநாடுமுழுவதும்உள்ள தலித்துகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் புரிந்து வைத் துள்ளனர். இந்த காரணத்துக் காகத்தான், அவர்களை (மத்திய அரசு, பாஜக) காங்கிரசு எதிர்க்கிறது.

வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்பாஜகதோற்கடிக்கப்படும்.இதையடுத்து,மத்தியில்தலித்துகள்,ஒடுக் கப்பட்டமக்கள், பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் நலன்களை விரும்பும் அரசு அமையும். எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடை சட்டத்தை காங்கிரஸ் கட்சியும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுமே கொண்டு வந்தனர். அதனால் அந்த சட்டத்தை காங்கிரசு கட்சி, பிறருடன் சேர்ந்து பாதுகாக்கும். அந்த சட்டத்தின்மீது தற்போது தாக்கு தல் தொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலை தொடுத்த நீதிபதிக்கு, மத்திய அரசு பதவி உயர்வும் அளித்துள்ளது (எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி கோயல், ஓய்வுக்குப் பின் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நிய மிக்கப்பட்டதை குறிப்பிட்டார்).

பாஜகவின் ஆட்சி நடைபெறும் மாநி லங்களில் தலித்துகள் வெளிப்படையாக தாக்கப்படுகின்றனர். அவர்களை ஒடுக் கும்பணியும்வெளிப்படையாகவேநடக் கிறது.இத்தகையஇந்தியாவை காங்கிரசு கட்சிவிரும்பவில்லை.தலித்துகள்,ஏழை கள்,பழங்குடியினர்,சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும்சம மாகவாழும்இந்தியாவையேகாங்கிரசு விரும்புகிறது. இது போன்ற இந்தியா வுக்காகவே காங்கிரசு போராடுகிறது. இந்தப் போராட்டத்தில் இருந்து காங்கிரசு பின்வாங்காது என்று ராகுல் காந்தி கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner