எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஆக.12 வெள்ளப் பாதிப்பில் சிக்கி தவிக்கும் கேரளத்துக்கு புதுவை அரசு சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப் படும் என அம்மாநில முதல்வர் வே.நாராயணசாமி

தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர், புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கேரளத்தில் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் சனிக்கிழமை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

அப்போது, புதுவை அரசு சார்பில் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதைச் செய்ய தயாராக உள்ளோம் என அவரிடம் தெரிவித்தேன். கேரளத்துக்கு புதுவை அரசு சார்பில் ரூ. ஒரு கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும்.

அதுமட்டுமன்றி, மீட்புப் பணிகளுக்காகவும், அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் உதவி செய்ய முதல்வர் நிவாரண நிதியில் தனிக் கணக்குத் தொடங்கி வசூலித்து கேரளத்துக்கு அனுப்ப உள்ளோம். கேரள மாநிலத்தின் ஒரு பகுதியாக புதுவை மாநிலத்துக்கு உள்பட்ட மாஹே பகுதி உள்ளது. ஆகவே, புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் தங்களால் இயன்றளவு உதவி செய்ய வேண்டும்.

மருந்துகள், துணிகள், அரிசி போன்ற நிவாரணப் பொருள்களை வழங்க நினைப்பவர்கள் தாராளமாக கொடுத்து உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner