எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிந்து, ஆக. 13- பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், கணவனை இழந்த அல் லது விவாகரத்து ஆன இந்து பெண்கள் மறுமணம் செய்துகொள்வதற்கு அனு மதியளிக்கும் சட்டத் திருத்த மசோ தாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிந்து மாகாணத்தில் வாழும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள், கணவனை இழந்துவிட்டால் மறுமணம் செய்து கொள்வதற்கு இதுவரை அனுமதி இல்லாத நிலையில், தற்போது அவர்க ளுக்கு அந்த உரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, சிந்து இந்து திருமண சட்டத் திருத்த மசோதா-2018’அய், சட்டப் பேரவையில் பாகிஸ்தான் முஸ் லிம் லீக் கட்சியின் செயல் தலைவர் நந்த் குமார் கோக்லானி, கடந்த மார்ச் சில் தாக்கல் செய்தார்.

இந்து பெண்கள் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறுவதை உறுதி செய்யும் இந்த மசோதா, விவாகரத்து ஆன அல் லது கணவனை இழந்த பெண்கள் மறு மணம் செய்துகொள்வதையும் அனும திக்கிறது.

மேலும், கணவனை பிரிந்த பெண்க ளுக்கும், அவர்களது குழந்தைகளுக்கு மான நிதி பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன், இந்து மதத்தில் குழந்தை திருமணங்களுக்கு தடை விதிக்கவும் வழிவகை செய்கிறது.

இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ மற்றும் இதர கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, சிந்து இந்து திருமண சட்டத் திருத்த மசோதா-2018 அண்மை யில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அப்போது பேசிய நந்த் குமார் கோக்லானி, இந்து மதத்தில் உள்ள பழைமையான வழக்கங்களால் பெண் கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளுக்கு, இந்த சட்டத் திருத்த மசோதா தீர்வாக அமையும். இது அமலுக்கு வருவதற்கு முன் கணவனை பிரிந்த பெண்களும் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெறலாம், என்றார்.

இந்நிலையில், இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு சிந்து மாகாண ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner