எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஆக.15 இந்திய மக்கள் தொகையில் சுமார் 66 கோடி பேர் காற்று மாசு பிரச்சினைக்கு ஆளாகியிருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

சிகாகோ பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு கென்னடி பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இந்தி யாவின் காற்றுத் தரம் மற்றும் காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் இறுதியில் இந்தியாவின் காற்றை சுத்தப்படுத்துவதற்கான திட் டம்‘ என்ற பெயரில் பரிந்துரைகளை வெளியிட்டனர்.

நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங் களின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங் களிடம் கடந்த சில ஆண்டுகளாக பெறப்பட்ட தகவல்களின் அடிப் படையில் இந்த ஆய்வுத் தகவல் கணக் கிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருந்ததாவது:

இந்தியாவில் வசிப்பவர்களில் 66 கோடி பேர் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசிக் கும் பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதி களவில் மாசு நுண்துகள்கள் காற்றில் பரவிக் கிடக்கின்றன.

இந்தியா, தனது காற்றுத் தர அளவீடுகளை எட்டும் பட்சத்தில், இந்தியர்களின் ஆயுள்காலம் சராசரியாக ஓராண்டு அதிகரிக்கும்.

இதுவே, காற்றுத் தரத்தில் உலக சுகாதார அமைப்பின் அளவீடுகளை இந்தியா எட்டும் பட்சத்தில், இந்தியர் களின் ஆயுள்காலம் சராசரியாக 4 ஆண்டுகள் வரையில் அதிகரிக்கும். காற்றுத் தரம் மேம்பட்டால், டில்லி போன்ற பெருநகரங்களில் வசிப் போரின் ஆயுள்காலத்தில், சராசரியாக 6 ஆண்டுகள் அதிகரிக்கும்.

காற்றுத் தரத்தை மேம்படுத்த, தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றி லிருந்து வெளியேற்றப்படும் புகையின் அளவை கூடுதல் எண்ணிக்கையிலான அதிகாரிகளின் மூலமாக கண்காணிக்க லாம். வெளியேறும் புகையின் அள வை கணக்கிட, நிகழ்நேர தரவுகளைக் கொண்ட கட்டுப்பாடுகளை ஏற்படுத் தலாம். கூடுதலாக புகையை வெளி யேற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கலாம். காற்று மாசு ஏற்படுத்து வோர் தொடர்பாக பொதுமக்களுக்கு தகவல் அளிக்கலாம் என்று அந்த பரிந்துரைகளில் கூறப்பட்டிருந்தது.