எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுடில்லி, ஆக.15 -12 வயதுக் குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனை களை விதிப்ப தற்கான குற்றவியல் சட்டம் (திருத்தம்) 2018 -க்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். கத்துவா சிறுமி மற்றும் உன்னாவ் இளம்பெண் ஆகியோர் பாலியல் வன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை யடுத்து கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி யன்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு குற்ற வியல் சட் டம் (திருத்தம்) அவசரச் சட்டமாக பிர கடனப்படுத்தப்பட்டது. பாலியல் குற்றங் களுக்கு எதிரான போராட்டங்களின் தொடர் அழுத்தமே இச்சட்டம் வருவதற்கு முக்கிய கார ணம் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சட்டத்துடன் தொடர்புடைய இந்திய தண்டனைச் சட்டம், இந்திய தடயச் சட்டம் 1872, குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 உள்ளிட்ட சட்டங்களில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இச்சட்டத் திருத்தத்தை அங்கீகரித்த பிறகு, சனிக்கிழமை யன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இத்திருத் தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர் களுக்கு, குறிப்பாக 12 வயது  முதல் 16 வயதுக் குட்பட்ட பெண் குழந்தைகளை வன்கொடு மைக்கு உள்ளாக்குபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்யும் கயவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை என்றிருந் ததை 10 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனையாக மாற்றப்படும்; மேலும் இது வாழ்நாள் சிறை தண்டனையாகவும் விரிவாக்கம் பெறும். இப் புதிய சட்டப்படி, வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்ட குழந்தை 16 வயதிற்குட்பட்டவர் என் றால், குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனை யாக 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கவும் வழி செய்கிறது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்ட குழந்தை 12 வயதிற்குட்பட்டவர் என் றால், குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் மேலும் வாழ்நாள் சிறை தண்டனையோ அல்லது மரண தண்டனையோ விதிக்கப்படும். பாலியல் வன் கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிப்பதற் கும் சோதனைகள் மேற்கொள்வதற்கும் இச் சட்டம் கால அளவை நிர்ணயித்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசா ரணையை கட்டாயம் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்குகளின் அனைத்து சோதனைகளையும் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் காலக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் மேல்முறையீடு ஏதேனும் இருந்தால், அவற்றை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும். 16 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை களை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு முன் பிணை வழங்கும் விதி இச்சட்டத்தில் கிடையாது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner