எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஆக.17 கேரளா மாநிலத் தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணை களில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக் கிறது. இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 72 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத் தில் சிக்கியும், நிலச்சரிவாலும் பலியா னோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 30க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நேற்று மலப்புரம் மாவட்டத்தில் வீடு இடிந்ததில் 8 பேர் பலியாகினர். பத்தனம்திட்டா, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, இடுக்கி, எர்ணாகுளம் உள்பட பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி 30-க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை கேரளாவில் மிதமிஞ்சிய மழை பெய்யும் என்றும் இன்று (17-ஆம் தேதி) காலை 8.30 மணி முதல் 19-ஆம் தேதி காலை 8.30 மணி வரை பலத்த காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை உள்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று பார்வையிட்டார். முதல் கட்டமாக கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ.100 கோடி நிதி உதவியையும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மேலும், கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி கேரள முதல்- அமைச்சர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

கேரளாவில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயமும் உள்ளது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 28-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டிருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த நாட்களில் நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து  செய்யப்படுவ தாகவும், தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என் றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரளாவில் மீட்பு பணிகளை மேற்கொள் வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் 5 குழுவினர் திருவனந்தபுரம் வந்து சேர்ந் துள்ளனர். மேலும் 35 குழுவினர் இன்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளா வெள்ள பாதிப்பு - நிவாரண உதவிகளுக்கு ரூ.5 கோடி வழங்கியது ஒடிசா

கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்பு களுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் 5 கோடி ரூபாய் அளித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, நவீன் பட்நாயக் கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிவாரண நிதி அளிப்பது குறித்து பேசினார். மேலும், தேவைப்படும் உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner