எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 18-உள்நாட்டில் யூரியா உற்பத்தி 1.6 சதவீதம் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உரத் துறை அமைச்சகத்தின் உயரதி காரி வியாழக்கிழமை கூறியதா வது:

உள்நாட்டில் யூரியா உற் பத்தி கடந்த 2017-20-18 நிதி ஆண்டில் 2.40 கோடி டன்னாக இருந்தது. இந்த நிலையில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சில ஆலைகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், நடப்பாண்டில் அனைத்து ஆலைகளின் செயல் பாடும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் யூரியா உற்பத்தி 2.44 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு உற்பத்தி யுடன் ஒப்பிடுகையில் இது 1.6 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டில் ஆண்டுக்கு 3 கோடி டன் யூரியா தேவை என்ற நிலையில் அதற்கான பற்றாக்குறை நடப்பாண்டிலும் ஏற்படும். எனவே, தேவையை ஈடு செய்ய 50--60 லட்சம் டன் யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner