எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

திருவனந்தபுரம், ஆக.18- கேரளத்தில் கடந்த நூறாண்டு களில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான மழை - வெள்ளம் ஏற் பட்டுள்ளது என்றும், இதுவரை 324 பேர் பலியாகிவிட்டதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வருத்தத்துடன் கூறியுள் ளார்.

மழைக்கும், நிலச்சரிவுக்கும் வெள்ளிக் கிழமை வரை 324 பேர்பலியாகிவிட்டனர். லட்சக்கணக்கா னோர் மீட்கப்பட்டுள்ளனர். 1567 முகாம்களில் 52856 குடும்பங்களைச்சேர்ந்த 2.3லட்சம் பேர் தஞ்ச மடைந்துள்ளனர்.

பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணா குளம், திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஆபத்தான நிலையில் வெள்ள அபாயம் தொடர்கிறது. இதுதொடர்பாக திருவனந்த புரத்தில் வெள்ளியன்று முதல்வர்பினராயி விஜயன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்ட பல பகுதிகளில் ஆயிரக் கணக்கானோர் இன்னும் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க தீவிர முயற்சி எடுக்கப் பட்டு வருகிறது. இடுக்கியிலும், வயநாட் டிலும் தற்சமயம் மழை குறைந்துள்ளது. ராணி, கோலஞ்சேரி பகுதிகளில் வெள்ளம் குறையத் தொடங்கி யுள்ளது. செங்ஙன்னூர், சாலக்குடி பகுதிகளில் சிக்கியிருந்தவர்கள் படகுகள் மூலம் மீட்க முடியாதவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்கள்.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கி இருப்போருக்கு உணவும், குடிநீரும் வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. இதற்கான உணவுப் பொட்ட லங்கள் தயாராக உள்ளன. மத்தியஅரசுத் தரப்பில் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் மாநிலத்துக்கு வந்துள்ளன. தொடர்ந்து பிரதமரையும், பாது காப்பு அமைச்சரையும் தொடர்பு கொண்டு நிலைமைகளை விளக்கி வருகிறோம். மீட்புக்காக மேலும் கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிலைமையை கருதி சாதகமான நடவடிக் கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.தற்போது ராணுவத்தின் 16 குழுக்கள், கப்பற்படையின் 13 குழுக்கள் மற்றும் என்டிஆர்ஏஎப் குழுக்கள்39, கடலோர காவல்படையின் 28குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் 14 குழுக்கள் வர உள்ளன. இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

கேரளத்தில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்துநாட்டின் பல்வேறு பகுதிகளிலி ருந்தும் தமிழகத்திலிருந்தும் கேரளத்திற்கு நிவாரண உதவிகள் குவியத் துவங்கியுள்ளன. கேரள மின்சாரத்துறை வசம் உள்ள 58 அணைகள், நீர்ப்பாசனத்துறை வசம் உள்ள 22 அணைகள் என அனைத்து அணைகளும் முழுமையாக திறந்துவிடப் பட்டுள்ளன. அணைகளுக்கு வரும்நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

வேண்டுகோள்

இதனிடையே திருவனந்தபுரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், முன்னெப் போதும் இல்லாத வெள்ளம் கேரளத்தைச் சூழ்ந்துள்ளது; கட்சி யின் ஒட்டுமொத்த தோழர்களும் ஆதரவாளர் களும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முற்றாக இறங்கியுள்ளனர். ஆகஸ்ட் 18, 19 தேதிகளில் மாநிலம் முழுவதும் மிகப்பெரும் அளவில் நிதி திரட்டும் இயக்கம் நடைபெறு கிறது; இந்த நிதி மற்றும் உதவிகள் அனைத்தும் முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என்று கூறியுள்ளார்.

கேரள வெள்ள நிவாரண நிதி

தெலங்கானா அரசு ரூ.25 கோடி,

ஆந்திரப்பிரதேச அரசு ரூ.10 கோடி நிதி உதவி

அய்தராபாத், ஆக.18   கேரளாவில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்தநிலையில், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு, தெலுங்கானா மாநில அரசு சார்பில் ரூ.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரப்பிரதேச மாநில அரசு சார்பில் கேரளாவிற்கு ரூ.10 கோடி வெள்ள நிவாரன நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. டில்லி அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கவதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்- அமைச்சர் அமரிந்தர் சிங் 10 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குதாக அறிவித்தார்.